வரவணை செந்தில்'s banner
வரவணை செந்தில்'s profile picture

வரவணை செந்தில்

@Varavanaisen • 38,498 subscribers

Journalist/Belongs to the Dravidian Stock

Shorts

உயிரை காப்பாத்தும் மானுடத்துடன் ஒருவரின் உடலை தோளில் தூக்கி கிளம்பும் ரசிகரின் செயலை, தடுத்து நிறுத்துகிறது "ஓகே கண்டினியூ பண்ணலாமா" என்கிற விஜயின் குரல். அருகிலிருந்த இன்னொருவர் "டேய் நிறுத்துடா" என்று குரல் எழுப்புகிறார். எந்தப் பயனும் இல்லை. #KarurTragedy

உயிரை காப்பாத்தும் மானுடத்துடன் ஒருவரின் உடலை தோளில் தூக்கி கிளம்பும் ரசிகரின் செயலை, தடுத்து நிறுத்துகிறது "ஓகே கண்டினியூ பண்ணலாமா" என்கிற விஜயின் குரல். அருகிலிருந்த இன்னொருவர் "டேய் நிறுத்துடா" என்று குரல் எழுப்புகிறார். எந்தப் பயனும் இல்லை. #KarurTragedy

88,938 views

களத்தில குதிப்போம் #80smusic

களத்தில குதிப்போம் #80smusic

16,436 views

ரீல்ஸ் அல்லது பீலா - இதுதான் தவெக ஆட்சி

ரீல்ஸ் அல்லது பீலா - இதுதான் தவெக ஆட்சி

27,933 views

Entering office with Proud after Thalaivar announcement 🖤❤️😻😻#MagalirUrimaiThogai #MKStalinEra #வெல்வோம்_ஒன்றாக

Entering office with Proud after Thalaivar announcement 🖤❤️😻😻#MagalirUrimaiThogai #MKStalinEra #வெல்வோம்_ஒன்றாக

20,882 views

புயலோ வெள்ளமோ, எத்தகைய இடர்வரினும் மக்கள் குறை தீர்க்க அங்கு ஸ்டாலின் வருவார் - #VoteForDMK 🖤❤️🌄

புயலோ வெள்ளமோ, எத்தகைய இடர்வரினும் மக்கள் குறை தீர்க்க அங்கு ஸ்டாலின் வருவார் - #VoteForDMK 🖤❤️🌄

14,814 views

Videos

Varavanaisen's profile picture

நண்பர்,அண்ணன் மாதிரி...தொழிலில் நொடித்து,உடன் பிறந்த அண்ணனே கடனாளி ஆகிவிட்ட கொடுமைக்கு உள்ளாகி, அதன் காரணமாக மன அழுத்தம் கூடுதலாகி சர்க்கரை நோய் வந்து, வேலைக்கு செல்ல முடியாமல் தேங்கி நிற்க மனைவி வேலைக்கு செல்லத்தொடங்கினார்.இரு பிள்ளைகள் வேறு. மனைவி ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுத்திருந்தார்.வேலையில் விட்டு பின் அழைத்து வருவதே அவரின் வேலையாகிப்போனது. வைராக்கிய மனைவி 20 பிள்ளைகள் வரை வைத்து இரவு 9:30 வரை டியூசனும் எடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக கணவனின் கடன்களை கட்டத்தொடங்கினார். 2019ல் அவரின் நம்பரில் இருந்து இரவில் போன் வந்தது. அவர் இறந்துவிட்டதாக தகவல். எப்படியோ சென்னையிலிருந்து கிளம்பிச் சென்று முகம் பார்த்து திரும்பினேன். பின்னர் கொரோனா உச்சத்தில் இருந்த போது அந்த அண்ணியிடம் இருந்து போன். "உங்கண்ணன் ஊரெல்லாம் கடன் வாங்கியிருக்காரு...வண்டி புக்கைகூட வைத்து கடன் வாங்கிட்டு போய்சேர்த்துட்டாரு...எனக்கும் இப்ப ஸ்கூல் இல்லாததால் சம்பளம் இல்லை. கொஞ்ச பணம் கொடு" என்றார். எனக்கே அப்போது அரைச் சம்பளம்தான். கொள்ளை நோய் என்ன செய்யுமோ என்கிற பயத்தில் குடும்பத்தை அவர்களின் கிராமத்துக்கு அனுப்பிவிட்டேன். இருந்தாலும் அவர்கள் கேட்டதை கொடுத்தேன். பின்னர் அழைப்பெல்லாம் இல்லை. நானும் மறந்துவிட்டேன். இரண்டாண்டுக்கு முன் அழைத்தேன். பிள்ளைகள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். பையன் காலேஜ் முடிச்சிட்டு அப்படியே ஒரு ஜவுளிக்கடைக்கு வேலைக்கு போயிடுறான். நானும் என் ஊருக்கே வந்துட்டேன்பா...மாசம் ஒரு கடன்காரன் புதுசு புதுசா வர்றான். என்னால சமாளிக்க முடியலை..இங்கையே ஒரு ஸ்கூலில் சேர்ந்து வேலை பார்க்கிறேன் என்றார். படிக்கிற புள்ள வேலைக்கு போகுதா என்று கவலைப்பட்டேன். ரெண்டு நாள் முன்பாக அந்த அண்ணியிடம் இருந்து போன் மிஸ்ட் காலாகி இருந்தது. சரியான டிராப்பிக்கில் இருந்தேன். மீண்டும் போன் வரவும் எடுத்தேன். " தம்பி, சின்னவன் ஆபிஸராகிட்டான்பா..இப்பத்தான் ரிசல்ட் போட்டிருக்காங்க...வீட்டுக்கு ஆர்டர் காப்பி வருமாம்...நான் பட்ட பாடெல்லாம் ஒரே நாளில் முடிஞ்சு போச்சுப்பா...மொத ஃபோன் உனக்கு பண்ணனும்ன்னுதான் திரும்பத் திரும்ப கூப்பிட்டேன்...வேலையா இருப்ப வீட்டுக்கு போயிட்டு கூப்பிடு" என்று கட் செய்தார். அந்த அண்ணன் என் மிகுந்த கஷ்டகாலங்களில் "நூற்றாண்டு பஞ்சத்தை ஒரு நாள் ஒரே ஒரு நாள் கொட்டுற மழை முடிச்சுவிட்டிரும்..விடு செந்திலு கவலைப்படாதே " என்று எனக்கு ஆறுதல் சொல்லுவார். சொன்னவர் சொன்னதை நேரில் பார்க்க ஆளில்லை.ஆனால் சொன்னது நடந்ததை நான் பார்த்தேன். ஹெல்மெட் வைசரை இறக்கிவிட்டு சில பல கிலோ மீட்டர் வில் ஸ்மித் மோடில் வீட்டுக்கு வந்தேன்.

வரவணை செந்தில்

47,060 views • 1 month ago