
Sam Ponraj
@ArchitectSam76 • 3,907 subscribers
Architect | Design | Construction
Shorts
Videos

இப்படி எல்லாம் ஒரு காலத்தில் தமிழக முதலமைச்சர் மக்களை சந்தித்தார். அந்த வசந்த காலம் இனி எப்போ வருமோ!!
Sam Ponraj51,573 просмотров • 3 месяцев назад

கம்பி கட்டுவதற்கு முன்பாக தரையில் போட வேண்டிய pcc போடவில்லை. தரையில் ஒரு அடி தண்ணீர் இருக்கிறது. அதிலேயே கம்பி கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வெளிச்சம் கூட இல்லாமல் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் வேலை செய்கிறார்கள். Sriram avenue, 2nd street, Kottivakkam. இதை நான் படம் எடுத்துக் கொண்டு விசாரித்து கொண்டு இருந்த போது ஒப்பந்ததாரர் தரப்பு ஒருவர் அங்கே வேகமாக வந்து, எதுக்கு சார் வீடியோ எடுக்கிறீர்கள் என்று கோபமாக கேட்டார். என்னுடைய சாலையில் நடக்கும் வேலையை நான் ஏன் வீடியோ எடுக்க கூடாது என்று கேட்டேன். நீங்க பேஸ்புக்ல எல்லாம் போடுறீங்க என்று அடுத்த கேள்வி கேட்டார். நான் ஏன் போட கூடாது என்று கேட்டேன். இப்படியே பேசிட்டு இருக்கும் போது தரையில் Pcc போட்டீர்களா என்று கேட்டேன். நேற்று இரவு 2 மணிக்கு போட்டோம் என்றார். ஆனால் காலையில் நான் புகார் அளித்த பிறகு தான் தண்ணீரையே அகற்றி இரவு உடைத்த தண்ணீர் குழாயை சரி செய்தார்கள். அந்த சமயத்தில் கூட கீழே கான்கிரீட் இல்லை என்பதால் சரி ஒரு கம்பு வைத்து குத்தி காட்டுங்க என்றேன். அதை கேட்டவுடனே எதையோ பேசிக் கொண்டே தள்ளி போய் யாருக்கோ ஃபோன் செய்ய ஆரம்பித்து விட்டார். AEE ஐ அழைத்து விவரத்தை கூறினேன். அவரும் விசாரித்து விட்டு வேலையை நிறுத்தும் படி சொல்லி இருப்பதாக தெரிவித்தார். நாளை காலை PCC இருப்பதை உறுதி செய்து விட்டு வேலையை தொடர சொல்லி இருப்பதாக கூறினார். ஆனால் தொடர்ந்து வேலை நடந்து கொண்டு இருக்கிறது. இன்று இரவு கான்க்ரீட் போட்டு விட்டால் அதற்கு பிறகு ஒன்றும் செய்ய முடியாது. இரவு நேரத்தில் ஒப்பந்த்கதாரர்களிடம் போய் வேலையை தடுக்கும் தைரியம் எங்களுக்கு இல்லை. வீடியோ எடுத்தாலே கோபப்படும் அவர்கள் முன் சாதாரண மக்கள் நாம் எம்மாத்திரம். மனசாட்சி உள்ள மாநகராட்சி அதிகாரிகள் தான் வேலையை சரி பார்த்து ஆவண செய்ய வேண்டும். செய்வார்களா என்று நாளை காலை தெரியும். Greater Chennai Corporation KGB IAS CMOTamilNadu Chief Minister's Special Cell Tamil nadu Chief Secretary, Govt. of Tamil Nadu
Sam Ponraj44,528 просмотров • 1 год назад
Больше нет контента для загрузки