Balu's banner
Balu's profile picture

Balu

@balu_gs • 18,547 subscribers

☀️..Smart Solar Automation – Powered by Tech, Built on Trust..☀️

Shorts

இந்தியால அடுத்த 5 வருசத்துல சோலார் பவர் பீல்டுல மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் தொழில்நுட்பம்னு பார்த்தோம்னா Grid-Forming Inverter Technology தான். இன்றைக்கு நாம பரவலாகப் பயன்படுத்திட்டு இருக்கிற வழக்கமான Grid-Tie Inverter-கள் எல்லாமே அடிப்படையில் “Grid-Following” வகையைச் சேர்ந்தவைதான். அதாவது, EB Grid-ல் ஏற்கனவே இருக்கிற Voltage & Frequency-யை ஃபாலோ பண்ணித்தான் மின்சாரத்தை Grid-க்கு சப்ளை செய்யும். கிரிட் சப்ளை கட்டாச்சுனா, பாதுகாப்பு விதிமுறைகளின்படி இந்த இன்வெர்ட்டர்க பவர் உற்பத்தி செய்வத நிறுத்திவிடும். ஆனால் Grid-Forming Inverter [GFM] தொழில்நுட்பம் அப்படியில்லை. இது முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டது.கிரிட் இல்லாத சூழலிலும், தேவையான Battery Energy Storage System [BESS] அல்லது வேறு மின் ஆதாரம் மற்றும் சரியான System Configuration இருந்தால், தானாகவே Voltage & Frequency-யை உருவாக்கி ஒரு Virtual Grid) போலச் செயல்படக்கூடிய திறன் கொண்டது. அதுமட்டுமில்லாத, கிரிட்டில் Voltage மற்றும் Frequency மாறுபாடுகள் ஏற்படும்போது அவற்றைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. அடுத்த 5 வருடங்களில் இந்தத் தொழில்நுட்பம் ஏன் முக்கியத்துவம் பெறப்போகிறது? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக Solar + BESS திட்டங்களில் Grid-Forming Inverter முக்கியப் பங்கு வகிக்கப்போகிறது. சோலார் மின் உற்பத்தி மற்றும் பேட்டரி சேமிப்பு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, தேவைக்கேற்ப மின்சாரத்தை வழங்குவதோடு Grid Stability-யையும் மேம்படுத்த முடியும். பெரிய மருத்துவமனைகள், சிறிய தொழிற்சாலைகள், PG போன்ற இடங்களில் Critical Microgrid அமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவும். EB சப்ளை துண்டிக்கப்படும் சூழலில், சரியான வடிவமைப்பு மற்றும் போதுமான Energy Storage இருந்தால், தனித்த மின் கட்டமைப்பாக (Island Mode) செயல்பட்டு முக்கியமான மின் சுமைகளுக்குத் தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியும். இதில் Black Start Capability என்பதும் மற்றொரு முக்கியமான அம்சம். மொத்த கிரிட்டும் செயலிழக்கும் சூழலில், தேவையான மின் ஆதாரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் இருந்தால், வெளிப்புற Grid Support இல்லாமலேயே மின் கட்டமைப்பை மீண்டும் இயக்குவதற்கான வாய்ப்பை இந்தத் தொழில்நுட்பம் உருவாக்குகிறது. அதேபோல், சோலார் மின் உற்பத்தி திடீரென அதிகரிக்கும்போதும் குறையும்போதும், மின் சுமை மாறுபடும்போதும் Voltage & Frequency Stability-யைப் பாதுகாப்பதில் Grid-Forming Inverter-களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. குறிப்பாக Renewable Energy பயன்பாடு அதிகரிக்கும் எதிர்கால மின்சாரக் கட்டமைப்பில் இந்தத் தொழில்நுட்பத்தின் தேவை மேலும் அதிகரிக்கும். இன்றைக்கு வரைக்கும் சோலார் பவர் பிளாண்ட் என்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்து Grid-க்கு வழங்குவது என்பதுதான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் [ கூடிய சீக்கிரம்] இந்த அணுகுமுறை மாறப்போகிறது. வெறும் மின்சாரத்தை உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல், மின்சாரத்தைச் சேமிப்பது, தேவைக்கேற்ப விநியோகிப்பது, Grid-ஐ நிலைப்படுத்துவது, மின் சுமைக்கு ஏற்ப புத்திசாலித்தனமாகச் செயல்படுவது என ஒரு முழுமையான Intelligent Power Management System ஆக சோலார் மின் கட்டமைப்புகள் வளர்ச்சியடையப் போகின்றன. என்னைப் பொறுத்தவரை, அடுத்த 5 வருடங்களில் Solar + BESS + Grid-Forming Inverter இந்த மூன்றின் ஒருங்கிணைப்புதான் இந்திய மின்சாரத் துறையில் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. #KanaliTech #SolarPower #SMA #EPS #GFM #BESS

14,910 görüntüleme