
முனைவர். கணேசு ガネス
@DrGanesh_Japan • 17,633 subscribers
வேதியியலாளன் | எரிகலன் | மின்னாற்பகுப்பு | தற்போது கணினி வழிக் கற்றல் (Machine learning) திருவண்ணாமலை 🇮🇳 🔁 🇯🇵 @DrGaneshAcademy
Shorts
Videos

தவறான குழந்தை வளர்ப்பிற்கு ஒரு உதாரணம். வெள்ளியன்று எங்க டீம் பார்ட்டி ஒன்னு நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் 35-50 வயதுடையவர்கள். அங்கு அதிகமாக பேசியது இதைத்தான். இவங்க எல்லாம் பொற்றோருடன் வாழ்ந்தது ஒரு டிகிரி, ப்ரொபெஷனல் படிப்பு முடிக்கும் வரை தான். பின்னர் வேலை தேடி, திருமணம் முடித்து பெற்றொரை விட்டு பிரிந்து தனியே தான் வாழ்கிறார்கள். 20-30 வயசுல இருக்கவங்களுக்கும் இது பொருந்தும். குழந்தை வளர்ப்பிற்கு இவர்கள் யாரும் பொற்றேரை நம்பி இல்லை. அனைவருக்கும் பொற்றோர் இருக்கிறார்கள். வருசத்துக்கு 3-4 முறை சந்தித்திப்பார்கள். வீட்டு லோன், கார் லோன், குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு சேமிப்பு என கணவன் மனைவி இருவரும் ஓடுகிறார்கள். Inheritance tax இருப்பதால் பெற்றோரின் வீடுகள் நேரடியாக கைமாற்ற அதிக வரி செலுத்தணும். பரிசாக கொடுப்பதற்கும் ஒரு எல்லை இருக்கு. இப்படி எல்லாத்துக்கும் பெற்றோரை சார்ந்து வாழாமல், பெற்றோரின் சொத்துக்களை எதிர்பார்க்காமல், படிப்ப முடிச்சோமா தன் வாழ்க்கையை பார்த்தோமானு ஓடுகிறார்கள். நம்மூரிலோ ஒரே ஒரு தலைமுறை பொருளாதார வளர்ச்சியை அனுபவிக்க தொடங்கியவுடன் அடுத்த தலைமுறை அப்படியே சீரழிகிறது. சோப்லாங்கி சமூகமாக மாறுகிறது. கஷ்டம் தெரியாமல் வளர்ப்பதன் பின்விளைவுகள். வேலைக்கு போனால் தான் சோறு என்ற நிலை இல்லை. பெற்றோர் சோறு போடுவாங்க, பெற்றோர் சேர்த்து வைத்த சொத்து இருக்கிறது என்ற அலட்சியம். வெளிநாட்டில் குழந்தைகளை வளர்க்கவும் பெற்றோரை நம்பி இருக்கிறார்கள். இத்தனை pampered சமூகம் எப்படி அடுத்தடுத்த தலைமுறைகளை சுயமாக இயங்கும் தலைமுறையாக உருவாகப்போகிறது என்ற கவலை மட்டுமே எஞ்சியுள்ளது.
முனைவர். கணேசு ガネス134,852 次观看 • 21 天前

I no longer want to underestimate him. I wonder if TVK will be renamed Indian Vetri Kazhagam. Just as Tamil Nadu’s youth and women are bored with the DMK and ADMK despite the state’s growth, other states might feel the same. The Sanatana ecosystem is wholeheartedly supporting Joseph Vijay simply because he abandoned Periyar’s rationalistic approach to God. Modi’s popularity is also waning. Rahul is not an alternative to the Sanatana ecosystem. Dalit + Minority + Upper caste model is loading to rule India, whoever the leader may be.
முனைவர். கணேசு ガネス157,259 次观看 • 2 个月前

மொத ராத்திரி.. ஆர்ப்பாட்டமில்லாமல், இரத்தம் சிந்தாமல், காதல், சாதி, ஆணாத்திக்கம், பிற்போக்குத்தனம், Gen Z குழந்தைகள் & குழந்தை வளர்ப்பு, ஒரு சாதிக்குள் வர்க்கப்பிரச்சனை, கிராமங்களில் இன்றும் நிலவும் தீண்டாமை மனநிலை என அனைத்தையும் எதையும் வலிந்து திணிக்காமல் இயல்பாக காட்சிகளாக பதிவு செய்துள்ள திரைப்படம். தமிழ்ச் சினிமாவிற்கு வலிமை சேர்க்கும் திரைப்படம். நகைச்சுவை துணுக்குகள் 90% பேல் ஒர்க்கவுட் ஆச்சினு சொல்லாம். நடிகர்கள் அனைவரும் வெகு இயல்பா நம்முடைய உறவினர்கள் எப்படி இருப்பார்களோ இப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள். நாயகன் ரிஷிகாந்த் வெகு சிறப்பாக படத்தை தாங்கி நிற்கிறார். அடுத்த பக்கத்து வீட்டு பையன் கதாநாயகன் உருவாகிறார் மொமண்ட். ஆணுக்கான responsibility என்ன என்பதை வாழ்ந்து காட்டியுள்ளார். அதிகளவு வசனங்களே இல்லாமல், தன் மன அழுத்தத்தை கத்தி வெளிப்படுத்தும் காட்சியிலும், கிளைமேக்ஸ்ல தன் புலம்பலை கேட்க கூட ஆளில்லாத விரக்தியை புலம்பித்தள்ளுவதும் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை நம்மிடம் கடத்திவிடுகிறார். Literally she needs someone listen to her. கிராம பூசாரியாக சேத்தன் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்ந்து வாழறதுக்கு எதுவெல்லாம் தேவையில்லையோ அது தான் ஏற்பாட்டு திருமணங்களை இன்னமும் தீர்மானிக்கிறது என்பதை எத்தனை அழுத்தமாக பதிவுசெய்தாலும் இந்த சமூகம் ஜாதகத்தை தூக்கிக்கொண்டு சோசியக்காரங்ககிட்ட தான் போய் நிற்கும். பந்தல், நற்காலி, சவுண்ட் சர்வீஸ் செய்த கதாபாத்திரம் இரண்டு மூன்று வசனங்களில் கிராமங்களின் வேறு முகத்தை பதிவுசெய்கிறது. கடந்த 30-ஆண்டுகளில் இந்த விசயத்தில் முன்னேற்றம் இருந்தாலும் தமிழ்நாடு பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் எத்தனை பெரிய சாதியவாதிகள் என்பதை நாயகனின் அம்மா பாத்திரத்தை சற்று உன்னிப்பாக கவனித்தால் விளங்கும். நாயகியின் காதலன் கதாபாத்திரம் தான் இன்றைய தற்குறிகளை கண்முன்னே கொண்டுவருகிறது. இட ஒதுக்கீடு தொடங்கி, பல்வேறு அரசின் நலத்திட்டங்களால் கல்வி, பொருளாதார வளர்ச்சியை அடைந்த Gen Z களின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கஷ்டம் இல்லாமல் வளர்க்கிறேன் என்ற பெயரில் சொந்தமாக முடிவெடுக்க முடியாத, எதையும் கையாள தெரியாத பெற்றோர்களையே நம்பி வாழும் ஒரு தலைமுறை இளைஞர்களை வளர்த்துள்ளனர் என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமீபத்திய தமிழா தமிழா நிகழ்ச்சியும் ஒரு உதாரணம். 2026 இல் கிராமப் பின்னணியில் 24 மணி நேரத்தில் நடக்கும் கதையாக வெளிவந்த மொத ராத்திரி திரைப்படம் இந்த ஆண்டின் மிகச்சிறப்பான தமிழ்ப்படங்களின் பட்டியலில் இடம்பெறும். கடைசியா ஒரு கேள்வி: சித்தப்பன் தான் நிதிஷ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க முழு ஆதரவுடன் இருந்தாரே, கதாநாயகி தன் சித்தப்பாவை அப்ரோச் பண்ணி இருந்தாலே தன் காதலன் நிதிஷ் உடன் திருமணம் நடந்திருக்குமே, அதை ஏன் பண்ணல? CC: இயக்குநர்.
முனைவர். கணேசு ガネス70,282 次观看 • 1 个月前

Had this happened in India, the Hindutva Sanghi ecosystem would have cried: "It's her house, her rights." Glad this happened in Canada and she got arrested for troubling others’ food choices. India is so democratic (for elites). Regarding the arrest, if this happened in India, male police can't go there without a female police officer and wouldn't dare to touch her. Even with video proof, the tenant would have been arrested.
முனைவர். கணேசு ガネス34,693 次观看 • 1 个月前
1:12
Sensitive content
This media may contain sensitive content.

