Dr.S.A.S. Hafeezullah's banner
Dr.S.A.S. Hafeezullah's profile picture

Dr.S.A.S. Hafeezullah

@DrHafeezDMKoffl • 12,987 subscribers

State Deputy secretary, DMK Media relations| Author of two books| M.B.B.S., M.D | Doctor | தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர்|எழுத்தாளர்.

Shorts

LOP dealing with CM be like.. 3 நாள் டைம் எடுத்துக்கோங்க பா..

LOP dealing with CM be like.. 3 நாள் டைம் எடுத்துக்கோங்க பா..

13,031 views

எடப்பாடி பழனிசாமியின் 'வரியை உயர்த்தி ரூ.10,000 கொடுக்கும் திட்டம்'

எடப்பாடி பழனிசாமியின் 'வரியை உயர்த்தி ரூ.10,000 கொடுக்கும் திட்டம்'

19,810 views

Videos

DrHafeezDMKoffl's profile picture

Cheap Narration நடிகர் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பதால், சினிமா பாணியில் கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு. ஏப்ரல் வரை காங்கிரசுக்கும் அதுதான் நிலைப்பாடாக இருந்தது. மே மாதத்திற்கு காங்கிரஸ் மாற்றிக் கொண்ட பல நிறங்களில் இதுவும் ஒன்று போல? காவிரி தண்ணீர் வேண்டும், மேகதாது அணை கட்டக் கூடாது என்பதெல்லாம் சீசனல் பிரச்னையா? அதில் உங்கள் நிலைப்பாடு என்ன? அது தொடர்பிலான விவாதம் எழுந்தால் கர்நாடகாவில் இருக்கும் உங்கள் அரசு மீது விமர்சனம் வரும். ஒன்றிய அரசின் மீது விமர்சனங்கள் வரும். ஒன்றிய அரசை எதிர்த்துப் பேச உங்கள் சோபா மாடல் முதலமைச்சருக்கு வாய் வலிக்கும். எல்லாரும் தப்பிக்க இதைக் கையில் எடுத்திருக்கிறீர்கள். அரிய வகை ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை நீங்கள் ஆதரித்தீர்களே அப்போது பாஜகவுடன் நீங்கள் கூட்டணி வைத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?. வந்தே மாதரம் பாடல் தொடர்பான மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட போது, அதனை எதிர்த்து கழகம் கடுமையாக களமாடியது. அப்போது காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருந்தது. அந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் ஏன் பேசவில்லை? பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தீர்களா? Fair Delimitation என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நான்கு மாதங்களுக்கு முன்பு வரை Fair Delimitation எனப் பேசி விட்டு இப்போது No Delimitation எனப் பேசுவது ஏன் என முதலில் விளக்கம் சொல்லுங்கள். உங்கள் சந்தர்ப்பவாதம் மற்றும் உங்கள் சோபா கூட்டணித் தலைவரைக் காப்பாற்ற கேவலமாக நெரேட்டிவ் செட் செய்யாதீர்கள். Anand Srinivasan

Dr.S.A.S. Hafeezullah

72,902 views • 2 months ago

DrHafeezDMKoffl's profile picture

கடந்த வாரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் என சட்டமன்றத்தின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பிறகு, தவெக உறுப்பினர்கள் பலரையும் பேசவிட்டு பேரவையில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி எல்லாம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்று பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப் படுகிறது என அதே 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். இதில் பல கேள்விகள் உள்ளன.. அதற்கு விளக்கம் தேவை என திமுக உறுப்பினர்கள் பேச எழுந்தால், 110 அறிவிப்புக்கு பிறகு யாருக்கும் பேச அனுமதி இல்லை என சபாநாயகர் கூறி பேச விட மறுக்கிறார். அது எப்படி ஒரே வாரத்தில் விதி மாறிவிடுமா? விமான நிலையம் கட்ட, விவசாயிகள் பாதிக்கப்படாத மாற்று இடங்கள் சென்னைக்கு அருகே எங்கு உள்ளது? ஏற்கனவே கையகப்படுத்திய இடங்கள் இப்போது என்ன ஆகும்? இப்படி பல கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க மறுக்கிறார்கள்?

Dr.S.A.S. Hafeezullah

25,341 views • 2 months ago

DrHafeezDMKoffl's profile picture

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற அவதூறுக்கு ஆதாரத்துடன் மறுப்புத் தெரிவித்தேன் அதுவும் தமிழில். ஆங்கில தொலைக்காட்சியில் ஏன் தமிழ்? பாஜக சார்பாக கலந்து கொண்ட நபர் இந்தியில்தான் பேசுவேன் என திமிராகச் சொன்னார். அந்த திமிருக்குப் பதிலடியாக நானும் தமிழில் பேசினேன். நாங்கள் எப்போதும் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தத் திமிரைத்தான் எதிர்க்கிறோம். திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இன்னும் இரண்டு நாளில் மொழிப்போர் தியாகிகள் தினம். இன்றே மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த வாய்ப்பு கிடைத்தது. தமிழ் காத்த தியாகிகளுக்கு வீர வணக்கம். #தீ_பரவட்டும்

Dr.S.A.S. Hafeezullah

39,849 views • 9 months ago