
JCD Prabhakar
@JCDPrabhakar • 16,951 subscribers
Speaker of the Tamilnadu Legislative Assembly, MLA - Thousand lights
Shorts
Videos

சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் நமது வார்த்தைகளிலும், செயல்பாடுகளிலும் கண்ணியத்தையும் பொறுப்பையும் கடைப்பிடிக்க வேண்டும். வன்முறையைத் தூண்டும் பேச்சுகளையும், தனிநபர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளையும் தவிர்த்து, நாகரிகமான அரசியல் கலாச்சாரத்திற்கு முன்னுதாரணமாக நாம் திகழ வேண்டும். நம்மை நாடே உற்று நோக்குகிறது. குறிப்பாக, அரசியல் பேச்சுகளை உன்னிப்பாக கவனித்து வரும் இன்றைய இளைஞர்கள் நம்மை முன்னுதாரணமாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டியது வன்முறையல்ல; ஜனநாயகம், கண்ணியம், பொறுப்பு மற்றும் நாகரிகமான அரசியல். #TNAssembly #MLA #JCD #JCDPrabhakar #speaker
JCD Prabhakar148,308 просмотров • 3 месяцев назад

மக்களின் நம்பிக்கையாக... இளைஞர்களின் ஊக்கமாக... தமிழகத்தின் முன்னேற்றப் பாதையாக... விளங்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய 52வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். #ThalapathyVijay #TamilNadu #CMVijay #CMJosephVijay #HBDCMVijay #Longlive
JCD Prabhakar119,175 просмотров • 4 месяцев назад

Watched this anchor leg so many times, and I know I’ll be watching it many more times! 🇮🇳❤️ My heartfelt congratulations to Vithya Ramraj for helping India clinch Gold in the 4x400m relay. Breaking P.T. Usha’s 42-year-old national record in the 400m hurdles makes this achievement even more special. Wishing you many more medals in the years ahead! 🥇👏 A special salute to Baranica Elangovan, who created history by becoming the first Indian to win an Asian Games medal in pole vault with her historic Bronze. 🇮🇳🥉 What a proud moment for Tamil Nadu! Heartiest congratulations to G. Kamalini, Vishal T.K., Abhay Singh, Joshna Chinappa, Velavan Senthilkumar and all the other medal winners from Tamil Nadu for bringing glory to our state and nation. And to every athlete from Tamil Nadu who represented India at the Asian Games — whether you returned with a medal or not, your dedication, sacrifice and hard work have made us proud. Keep pushing forward; greater achievements await you. 💪🇮🇳 Tamil Nadu is proud of each one of you. Wishing you many more victories in the years ahead! 🏆❤️ #VithyaRamraj #BaranicaElangovan
JCD Prabhakar31,516 просмотров • 1 месяц назад

சிறு வயதிலிருந்தே நான் ரசித்து வந்த இசை உலகின் தனித்துவமான குரலான சகோதரி எல்.ஆர். ஈஸ்வரி அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஆயிரம் விளக்கு தொகுதியில் வசிக்கும் அவருடன் இனிய உரையாடலில் ஈடுபட்டோம். அன்போடு அவர் பாடிய சிறிய பாடல் அந்த சந்திப்பை மேலும் சிறப்பாக்கியது. இந்த இனிய தருணம் என்றும் நினைவில் நிற்கும். #JCDPrabhakar #Thousandlights #LREaswari
JCD Prabhakar85,923 просмотров • 4 месяцев назад

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை தொடங்கி வைத்தோம். புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் குடும்பங்களின் சந்தோஷத்தையும் மேலும் சிறப்பிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் சார்ந்த சிறப்பான முன்னெடுப்புகளில் ஒன்றாகும். குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் வளர வாழ்த்துகிறேன். ❤️ #தாய்மாமன்தங்கமோதிரம்திட்டம் #JCDPrabhakar #KilpaukMedicalCollege #CMJosephVijay
JCD Prabhakar20,033 просмотров • 1 месяц назад

Heartfelt thanks to the people of Thousand Lights for your trust, love, and support. This victory belongs to every one of you. As your MLA, I will work with full dedication for the development and welfare of our constituency. Grateful to Honourable Chief Minister Vijay avl and everyone who stood with TVK. #TVK #ThalaivarVijay #JCDPrabhakar #Chennai #ஜேசிடிபிரபாகர் #CMVijay #Thousandlights #ஆயிரம்விளக்கு
JCD Prabhakar61,057 просмотров • 6 месяцев назад

“ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆயிரம் பணிகள்” திட்டத்தின் தொடக்கமாக 16-05-2026 அன்று அவ்வை சண்முகம் சாலை, சிவசண்முகபுரம் மற்றும் எம்.கே. இராதா நகர் பகுதிகளில் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன். பொதுமக்கள் தெரிவித்த சாலை, குடிநீர், கழிவுநீர், மின்விளக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்களின் தேவைகளை நேரில் அறிந்து உடனடி தீர்வு காண்பதே எங்கள் நோக்கம். #Thousandlights #ஆயிரம்விளக்கு #jcdprabhakar #ஜேசிடிபிரபாகர் #CMVijay #CMJosephVijay #மக்கள்கூட்ணி #justthebegining #peoplegovernment
JCD Prabhakar50,805 просмотров • 5 месяцев назад

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றது மிகுந்த பொறுப்பும் பெருமையும் அளிக்கிறது. இந்த வெற்றி என்னுடையது மட்டும் அல்ல… ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தொகுதி முன்னேற்றம், அடிப்படை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு, இளைஞர் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன். உங்கள் நம்பிக்கையே என் பலம்… உங்கள் குரலாக என்றும் செயல்படுவேன். #JCDPrabhakar #ThousandLights #TVKVijay #CMVijay #CMJosephVijay #ஜேசிடிபிரபாகர் #ஆயிரம்விளக்கு #thalaivarvijay
JCD Prabhakar39,554 просмотров • 5 месяцев назад

நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது… அதற்கு முன்பாக கொஞ்சம் light-ஆ, Monday-ஐ இசையோடு ஆரம்பிப்போமே! 😄🎶 அம்பத்தூர் வியாபாரிகள் சங்கத்தின் 60-ஆம் ஆண்டு விழாவில், என் மனதிற்கு மிகவும் நெருக்கமான மக்கள் திலகம் MGR அவர்களின் வேட்டைக்காரன் திரைப்படத்தின் “உன்னை அறிந்தால்…” பாடலை பாடிய இனிய தருணம். ❤️ சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், இந்த வீடியோவைப் பார்த்து கொஞ்சம் relax பண்ணிக்கோங்க! 😄 என் singing skills-க்கு எத்தனை marks? 🎤 Rating உங்கள் கையில்! 😄 #JcdPrabhakar #JCD #MGR #வியாபாரிகள்சங்கம் #60thAnniversary
JCD Prabhakar21,011 просмотров • 2 месяцев назад

நான் அளித்த வாக்குறுதியின்படி, ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களை சந்தித்து அவர்களுடன் அருமையான கலந்துரையாடல் மேற்கொண்டேன். அவர்களின் முன்னேற்றம் மற்றும் சமூக உயர்விற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதியளித்தேன். #ThirdGenderRights #SocialJustice #Inclusivity #EqualityForAll #CommunityEmpowerment #PeopleFirst #Vijaymodelgovernance #thousandlights #jcdprabhakar
JCD Prabhakar30,383 просмотров • 4 месяцев назад

சென்னை அண்ணா நீச்சல் குளத்தில் நடைபெற்ற Junior Aquatic Championship 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறுவர், சிறுமியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றியது மகிழ்ச்சியளித்தது. வெற்றி, தோல்வியைத் தாண்டி விளையாட்டில் பங்கேற்பதே முதல் வெற்றி. சிறுவயதிலேயே விளையாட்டு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, வலிமையான எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும். நம் குழந்தைகள் நீந்தட்டும்… விளையாடட்டும்… ஆரோக்கியமாக வளரட்டும்… நாளைய சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழட்டும்! 🏊♂️🏊♀️ வாழ்க விளையாட்டு! வளர்க நம் குழந்தைகள்! #FutureofTN #Swimming #JCD #JCDPrabhakar #HealthyChildren #ProsperousTN
JCD Prabhakar18,662 просмотров • 2 месяцев назад

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு தனது முதல் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், சட்டப்பேரவையின் தொடக்க உரையில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த 100 நாட்களில் மக்களின் நலனை முன்னிறுத்தி சிறப்பான ஆட்சியை வழங்கி வரும் அரசின் நல்ல செயல்பாடுகள் தொடர்ந்து சிறக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை காத்து, தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் இந்த நல்லாட்சி தொடர்ந்து சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்லாட்சி தொடரட்டும்… தமிழகம் வளம் பெறட்டும்! 🇮🇳 #100DaysOfTVKGovernment #TVK #CMJosephVijay #CMVijay
JCD Prabhakar13,331 просмотров • 2 месяцев назад

இளைஞர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, எனது பிரதிநிதிகளுடன் இணைந்து ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை நேரில் ஆய்வு செய்து, அங்கு தினமும் பயன்படுத்தி வரும் இளைஞர்களுடன் கலந்துரையாடினோம். இந்த ஆய்வின் போது, குடிநீர் வசதி இல்லாமை, சீரற்ற மற்றும் சேதமடைந்த மைதானங்கள், போதிய வெளிச்ச வசதி இல்லாமை, கழிப்பறை தேவைகள், CCTV கேமராக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல அடிப்படை வசதி குறைகள் குறித்து இளைஞர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் மைதான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டும் உடற்பயிற்சியும் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க முக்கிய பங்காற்றுகின்றன. இளைஞர்களை மது, போதைப்பொருள் பழக்கம் மற்றும் தேவையற்ற கவனச்சிதறல்களிலிருந்து விலக்கி, நல்ல பாதைக்கு வழிநடத்த விளையாட்டு மிகப்பெரிய கருவியாக இருக்கும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலில் விளையாடி வளர ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே நமது நோக்கம். #jcdprabhakar #CMVijay #CMJosephVijay #TVK # #ஜேசிடிபிரபாகர் #TVKVijay #ஆயிரம்விளக்குதொகுதியில்ஆயிரம்பணிகள் #Thousandworksinthousandlightsconstituency #peoplegovernment
JCD Prabhakar17,738 просмотров • 5 месяцев назад
Больше нет контента для загрузки