Karl Marx's banner
Karl Marx's profile picture

Karl Marx

@karlmarxlives • 2,933 subscribers

Common sense is REAL KNOWLEDGE. சமரசம் இல்லாத நேர்மையான, வெளிப்படையான ஆட்சி, நிர்வாகம் சாமானியனின் உரிமை. #ImNoCommunist.

Videos

karlmarxlives's profile picture

மற்றுமொரு #தமிழகவெற்றிக்கழகம் under estimation Brother. கடந்த காலங்களின் எண்கள், கணக்குகள், வெற்றி, தோல்வி போன்ற எல்லா விதமான புள்ளி விவரங்களும் சுக்கு நூறாக உடையும் ஆண்டாக 2026 தேர்தல் இருக்கும். "தமிழ்நாட்டு அரசியலில் முதலும் கடைசியுமான அப்படி ஒரு தேர்தல் என வரலாற்றில் எழுதப்படும்" #MGR தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலில் ஆட்சியை பிடிக்க அவருக்கு பல சாதகமான சூழ்நிலை இருந்தது, பெரும்பான்மை மக்களால் விரும்பப்பட்ட நடிகர், ஏழைகளிடம் இணக்கமாக பழகக் கூடியவர் என்ற பிம்பம் மற்றும் ஏற்கனவே #திமுக வின் மூலம் பெற்ற அரசியல் செட்டப். அப்படி எந்த பெரிய பின்புலமும் எங்கள் தலைவனுக்கு இல்லை. இருந்தாலும், வெற்றி நிச்சயமாகவே வாய்ப்புகள் அதிகம். 2021 இருமுனைப்போட்டி. 2 கோடி வாக்குகளைப் பெற்ற கட்சி ஆட்சியை அமைத்தது. 2026 அப்படி இருக்கப் போவதில்லை, மும்முனைப் போட்டியாக இருக்கும். அதே 2 கோடி வாக்குகளைப் பெரும் கட்சி ஆட்சி அமைக்கும். #DMK vs #TVK vs #ADMK #DMK எந்த மாதிரியான மெரிட்டில் 2021 இல் 2 கோடி வாக்குகளைப் பெற்றது என்பதையும், அந்த மெரிட்டுகள் 2026 இல் இருக்குமா என்ற ஒப்பீடுமே போதும், #திமுக தோற்பது உறுதி என்று. #ADMK ஏன் தோற்கும் என்பதற்கு நான் புதிதாக எந்தக் காரணம் எழுதத் தேவையில்லை. அந்தக் கட்சி இன்னும் அதே பழைய பஞ்சாங்க அரசியல் அணுகுமுறையில் அடைபட்டுக் கிடக்கு. #அதிமுக வின் எதிர்கால அரசியல் முகம் என்று ஒன்று அங்கு இல்லை. 2026 இக்குப்பிறகு #அதிமுக வின் முடிவு வேகமெடுக்கும். - கட்சி பலவாக உடைந்து கிடக்கு, தொடர் தோல்விகள், #BJP கூட்டு, நம்பிக்கை இழந்தத் தொண்டர்கள். - #திமுக ஏன் தோற்கும்? ஜெயிக்கும் என நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டிய ஒரே திட்டம் குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய், ஆனால் அதையே கிட்டத்திட்ட 1 கோடி பேருக்கு மட்டுமே கொடுக்கப் பட்டிருக்கு, வேறு எந்தத் திட்டமும் #திமுக மீண்டும் வேண்டும் என்று என்னும் அளவிற்கு மக்களை சென்று சேரவில்லை. - அந்த 1000 ரூபாய் வாங்கி குடும்ப செலவை பார்க்காத பாட்டிகள் மட்டுமே புகழும் திட்டமாக இருக்கு, குடும்பத்தை நடத்தும் குடும்பத் தலைவிக்கு இந்த அரசு வசூலிக்கும் வேறு மாதிரியான கட்டணக் கொள்ளை தெரிந்திருக்கிறது. - அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள், #Tnpsc மாணவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என ஒரு பெரும் working group பெரும் கோபத்தில் இருக்கு. - பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, #TASMAC, போதைப் பொருள் கலாசாரம் என அனைத்தையும் மக்கள் கவனித்து வருகின்றனர். - #உதயநிதி துணை முதல்வர், குடும்ப ஆட்சி, அதே #திமுக #அதிமுக வா என்ற கேள்வியும், மாற்றம் வேணும் எனும் குரலும் எண்ணமும், எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு வலுபெற்றுள்ளது. இன்றைய தமிழ்நாட்டு மக்கள் இதுவரை இந்தத் தமிழ்நாடு பார்த்திராத யூகிக்க முடியாத அளவிற்கான விழிபூர்ணவைப் பெற்றுள்ளனர். எல்லாம் இந்த இன்டர்நெட் கலாத்திற்கே நன்றி. மக்கள் வாக்குக்கு பணம் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்ற புரிதலை பெற ஆரம்பித்து விட்டனர். இப்படி #திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று உறுதி செய்ய நிறைய விடயங்கள் இங்கே கொட்டிக் கிடக்கு. இப்போது, ஏன் என் தலைவன் TVK Vijay வெற்றியைப் பெறுவான் என எழுதுகிறேன், - உறுதி செய்யப்பட்ட 1 முதல் 1.5 கோடி #TVKFamily. குடும்பத்தில் ஒரே ஒருவர் #TVK உறுப்பினராக இருந்தாலும், அந்தக் குடும்பத்தின் ஒரு வாக்கை தவித்து அனைத்தையும் #TVK விற்கு பெற்று விடுவார். - என்னைப் போல இன்னும் #TVK வில் official லாக இணையாமல் லட்சக் கணக்கில் இருக்கின்றனர். - நான் மட்டுமே குறைந்தது என்னுடைய ஒட்டு மொத்த குடும்ப வாக்குகளில் 80 சதவீத வாக்குகளை உறுதி செய்வேன். - என்னைப்போல எந்த எதிர்ப்பும் இல்லாமல், இங்கே இயங்குவர்கள் லட்சங்களில் உள்ளனர். - பெண்கள் செல்வாக்கு கொண்ட ஒரே தலைவன். - தலைவனை சினிமாவில் opponent ஆகப் பார்த்தாலும், களத்தில் ஆதரவு தெரிவிக்கும் இணக்கமான ரசிகர்கள். - #அதிமுக வின் தலைமை மீதும், எதிர்காலம் மீதும் நம்பிக்கை இழந்தவர்கள், வாய்ப்புகள் இல்லாமல் #திமுக விற்கு வாக்கு செலுத்தியவர்கள். - இரண்டு திருட்டுக் கூட்டத்தையும் வேண்டாம் என்பவர்கள், வெறுப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள். ...(1/2)... #TVK #TVKVijay‌ #TVKForTN #TVKfor2026 #தமிழகவெற்றிக்கழகம் #உங்கள்விஜய்_நா_வரேன்

Karl Marx

20,637 Aufrufe • vor 1 Jahr

Keine weiteren Inhalte verfügbar