Nainar Nagenthran's banner
Nainar Nagenthran's profile picture

Nainar Nagenthran

@NainarBJP • 98,792 subscribers

State President - TN BJP | Former Minister

Shorts

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை சரமாரியாகத் தாக்கும் அளவிற்கு காவல்துறை அதிகாரிக்கு துணிச்சல் எங்கு இருந்து வந்தது? அதிலும் ஒரு ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா காவல்துறையினரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது? குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய காவல்துறையே பாதிக்கப்பட்டோரை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் எங்கு சென்று நீதி கேட்பது என்று புரியவில்லை. காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு தீர விசாரணை செய்து, அதிகார மமதையில் அராஜகத்தின் ஊற்றிடமாக செயல்பட்டு மூன்று பெண்களை தாக்கிய காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் திரு. M.K.Stalin அவர்களை வலியுறுத்துகிறேன்.

959,383 görüntüleme

எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் திரு. Dr N. Marie Wilson அவர்களே? இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது. “அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும். பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!

102,766 görüntüleme

தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் திரு. முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு. 𓃰 Mustafa TVK ❤️💛𓃰 அவர்கள், அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பாரதத் தாயின் மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர் திரு. முகுந்த் வரதராஜன் அவர்களின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் திரு. முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்? திரு. முஸ்தபா அவர்கள் ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்? பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, திரு. முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா? மேலும், முதல்வர் திரு. ஜோசப் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் திரு. முஸ்தபா. திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் திரு. முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. திரு. முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களைத் தமிழக முதல்வர் திரு. TVK Vijay அவர்கள் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இதுதான் TVK Party HQ கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.

42,193 görüntüleme

மாண்புமிகு பாஜக தேசிய நிர்வாகிகள் மற்றும் அன்பு சொந்தங்கள் என் இல்லம் வந்து வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! தமிழக மாநில தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்த எனக்கு அளித்த ஆதரவுக்கும், பாஜகவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

74,849 görüntüleme

கல்வி நிலையங்களை கலையரங்குகளாக மாற்ற முயற்சிக்கிறாரா முதல்வர் திரு. TVK Vijay அவர்கள்? தவெக அமைச்சர்கள் திரு. Arunraaj TVK, திரு. TVK Sampath Coimbatore மற்றும் திரு. Vignesh TVK ஆகியோர் பங்குபெற்ற கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், தவெக கட்சியின் பிரத்யேகப் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. திரு. ஜோசப் விஜய் அவர்கள் முதல்வராக என்றைக்கு பொறுப்பேற்றுக் கொண்டாரோ அன்றில் இருந்து, விளம்பர வெறி முற்றிய தவெகவினரின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் வகுப்பு நடக்கும் போதே அத்துமீறி நுழைந்து சினிமா வசனம் பேசி ரீல்ஸ் எடுப்பது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து “விஜய் மாமா வாழ்க” என அவர்களை கோஷம் போட வைத்து ரீல்ஸ் எடுப்பது, அரசு நிகழ்ச்சி என்று கூறி பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று, தவெக சார்பாக சான்றிதழ் வழங்குவது, அரசு நிகழ்வுகளில் தவெகவின் பாடலை ஒலிபரப்புவது என ஒட்டுமொத்த தமிழகத்தையே சர்க்கஸ் கூடாரம் போல தவெகவினர் மாற்ற முயன்றுக் கொண்டிருப்பது அப்பட்டமான விளம்பர அரசியல். பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், படிக்கும் பிள்ளைகளை தங்கள் கட்சியின் விளம்பரத் தூதர்களாகவும், அரசு பட்டமளிப்பு விழாக்களை கட்சி கொண்டாட்டங்கள் போலவும் நினைப்பதை நிறுத்தி விட்டு, அரசு நிகழ்ச்சிகளுக்குரிய மாண்பை கற்றுக் கொள்ளுமாறு முதல்வரையும் அவரது அமைச்சரவையையும் வலியுறுத்துகிறேன்.

21,762 görüntüleme

Your extreme hatred towards Hinduism will lead to your downfall, Thiru Udhay! The fact that you spoke about abolishing Sanatana Dharma, the faith of hundreds of millions of Hindus, in your very first Assembly speech only shows that you are not yet politically mature. The relentless targeting of Hindus is utterly deplorable and deserves the strongest condemnation. The reason you have been demoted from Deputy Chief Minister to Leader of the Opposition is that you once publicly declared “I will abolish Sanatana Dharma” thereby earning the undying hatred of Hindus. Therefore, if you wish to grow further in politics, it is essential that you cast aside the hatred you harbour towards a particular religion and truly embrace religious harmony. You must henceforth understand that for every person belonging to each religion, Hindu, Muslim, or Christian - their religious identity and beliefs are of utmost importance. Remember that if you instead continue to belittle the beliefs of Hindus and attempt to do political based on religion, you will fall into a pit from which there is no return. Furthermore, Tamil Nadu is now eagerly watching to see how Chief Minister TVK Vijay, who has formed a government elected by the people - will respond to this hate campaign.

10,946 görüntüleme

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு முத்து பலவேசம் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் திரு தமிழ்ச்செல்வன் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி

19,852 görüntüleme

இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில், தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பாக வரவேற்பு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்ட தலைவர் திரு. சித்ராங்கதன் அவர்கள், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் திரு. தமிழ்ச் செல்வன் அவர்கள் மற்றும் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு. முத்துபலவேசம் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

16,877 görüntüleme

Videos

NainarBJP's profile picture

கலையின் மீது மதச் சாயம் பூசுவது, கடும் கண்டனத்திற்குரியது! Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு பாட்டு நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய சிறுமி "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்" என்ற இந்துக் கடவுளுக்குரிய பாடலைப் பாடி விட்டார் என்பதற்காக, சில இஸ்லாமியர்கள் அச்சிறுமிக்கு மிரட்டல் விடுப்பதை ஆளும் TVK Party HQ அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். கிறிஸ்துவ மதத்தை பின்னணியாகக் கொண்ட, திரு. KJ யேசுதாஸ் அவர்களின் ஐயப்பன் பாடல்களையும், திருமதி. LR ஈஸ்வரி அவர்களின் அம்மன் பாடல்களையும் கொண்டாடி, ரசித்து வரும் நமது தமிழ் சமூகத்தில், மற்ற மதத்தினர் இந்து பக்திப் பாடல்களை பாடுவது ஒன்றும் புதிதல்ல. இவ்வளவு ஏன், இந்து மதத்தைச் சேர்ந்த பலர், பல இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பக்திப் பாடல்களையும் பாடியுள்ளனர், இன்றளவும் பாடி வருகின்றனர். "கலை" என்ற குடையின் கீழ், நாம் அனைவரும் சமம். அப்படியிருக்கையில் முருகனின் பாடலைப் பாடியதற்காக ஒரு இஸ்லாமிய சிறுமி மீது, இத்தனை வெறுப்புகள் பரப்பப்படுவது உள்ளபடியே மன வேதனையளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் திரு. TVK Vijay அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதுமட்டுமன்றி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் அச்சிறுமிக்கு துணையாக நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

Nainar Nagenthran

206,522 görüntüleme • 22 gün önce

NainarBJP's profile picture

அமைதியான சமூகத்தில், தேவையற்ற குழப்பங்களை உருவாக்காதீர்கள் அமைச்சர் திரு. TVK Ramesh அவர்களே! தமிழகக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர், கொடிமரத்தை தாண்டி உள்ளே நுழையக் கூடாது என, கடந்த 2024 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள், தொப்பி அணிந்த இஸ்லாமியரை நீங்கள் உடன் அழைத்து சென்றது கடும் கண்டனத்திற்குரியது. இந்துக் கோவில்களின் புனிதத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டிய இந்து அறநிலையத்துறையின் அமைச்சரான நீங்கள், கோவில்களின் ஆகம விதிகளை தொடர்ந்து அவமதிப்பது, ஆணவத்தின் வெளிப்பாடே தவிர வேறில்லை. இல்லை தெரியாமல் தான் கேட்கிறோம், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தவெக MLA முஸ்தபா அவர்களை முதல் வரிசையில் அமர்த்துவதன் மூலமும், அண்ணாமலையார் கோவிலுக்குள் "உதவியாளர்" என்ற பெயரில் ஒரு இஸ்லாமியரை உடன் அழைத்து செல்வதன் மூலமும் நீங்கள் என்ன நிறுவ முயற்சிக்கிறீர்கள்? இதில் உங்களுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது? இந்து மதத்தின் மீதுள்ள நம்பிக்கையில், பிற மதத்தினர் தானாக இந்துக் கோவில்களுக்கு வருவது என்பது வேறு. ஆனால், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டும் என்ற நோக்கில் ஒருவரை அழைத்து வருவது என்பது வேறு. எனவே, எப்படியாவது "Limelight" இல் நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதையாவது செய்து சமூகத்தின் பெருங்கோபத்திற்கு ஆளாகாதீர்கள் அமைச்சரே! சட்ட விதிகளை மீறி, ஆகம விதிகளுக்கு எதிராக, கோவிலின் பாரம்பரிய முறையை மதிக்காமல், அண்ணாமலையார் கோவிலுக்குள் நுழைந்தவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுங்கள்! இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!

Nainar Nagenthran

91,973 görüntüleme • 20 gün önce

NainarBJP's profile picture

முருக பக்தர்களுக்கு எதிரானதாக உருமாறுகிறதா TVK Party HQ அரசு? செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை காணாமல் போன பதற்றம் தணிவதற்குள்ளாகவே, ஆன்மிக அரசியல் கட்சியின் சார்பாக, எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளுக்கும், சிறுவாபுரியில் இருந்து யாத்திரையாக கொண்டு செல்லப்படவிருந்த 108 வெற்றிவேல்கள் அடங்கிய வாகனத்தை, மீஞ்சூர் நெய்தவாயல் அருகே சமூக விரோதிகள் சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. 108 கிராமங்களின் வழிபாட்டிற்காக வழங்கப்படவிருந்த வெற்றிவேல்கள் தீயில் எரிந்து கருகுவதை பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போகிறது. சட்டமன்றத்தை “சர்ச்” ஆக மாற்றிய திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு மட்டும் வலுவாக தடை போட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் எப்படி மலரும்? இந்துக்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்ற சமத்துவ உணர்வு ஆளும் அரசுக்கே இல்லாத போது, சமூக விரோதிகளுக்கு எப்படி பயமிருக்கும்? அதனால் தான் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் அச்சமின்றி அரங்கேறுகின்றன. இந்துக்கள் மீது தொடரும் இத்தகைய அடக்குமுறைகளும், வன்முறைகளும் ஆபத்தானவை. எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், “மதச்சார்பின்மை” என்ற போர்வையில், முழுக்க முழுக்க சிறுபான்மையின மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் முதல்வர் திரு. TVK Vijay அவர்களை வலியுறுத்துகிறேன்.

Nainar Nagenthran

148,963 görüntüleme • 2 ay önce

NainarBJP's profile picture

முதல்வர் துறையில் ரூ. 45 லட்சம் டெண்டர் முறைகேடு! - திரு. ஜோசப் விஜய் பதிலளிக்க வேண்டும்! மேடைக்கு மேடை "ஊழலை வேரறுப்போம்", "நேர்மையான ஆட்சி தருவோம்" என்று வாய்வீச்சு நடத்திய முதலமைச்சர் திரு. TVK Vijay அவர்களின் போலி முகமூடி, அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரபூர்வமான ஆவணங்களால் சுக்குநூறாகக் கிழிந்து தொங்குகிறது. அவரது நகராட்சி நிர்வாகத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள தாம்பரம் மாநகராட்சியிலேயே அரங்கேறியுள்ள இந்த டெண்டர் முறைகேடு, TVK Party HQ ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவதை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது. பெருங்களத்தூர் மேம்பால ரவுண்டானாவில் ரூ. 27.30 லட்சம் மதிப்பிலான அசோகத் தூண் சிலையை ஜூலை 29 அன்றும், சிட்லபாக்கம் ஏரி அருகே ரூ. 18.60 லட்சம் மதிப்பிலான ‘Save Water’ சிலையை ஆகஸ்ட் 10 அன்றும் அமைச்சர் திரு. சரத்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு. பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ் ஆகியோர் திறந்து வைத்த நிலையில், ஏற்கனவே முடிவடைந்திருக்கும் இந்த இரு பணிகளுக்கும் ஆகஸ்ட் 6 அன்று அவசர அவசரமாக டெண்டர் கோரப்பட்டு, ஆகஸ்ட் 24 வரை அவகாசம் அளித்து, "2 மாதங்களில் பணியை முடிக்க வேண்டும்" என்று அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது அப்பட்டமான மோசடியாகும். தங்களுக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரரோடு கூட்டுச்சதி செய்து, பணிகளை முன்கூட்டியே முடித்துவிட்டு, பின்னாளில் போலி டெண்டர் விட்டுப் பணம் பார்க்கும் இந்தக் கிரிமினல் நாடகம் மன்னிக்க முடியாத துரோகமாகும். எனவே, அசோகத் தூண் அமைப்பதிலேயே அரங்கேறியுள்ள இந்தச் சட்டவிரோதக் கொள்ளைக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். மாநகராட்சி ஆணையர் உட்பட இந்த முறைகேட்டுக்குத் துணைபோன அதிகாரிகளைச் சஸ்பெண்ட் செய்வதோடு, ஒப்பந்ததாரருக்கான பணப் பட்டுவாடாவை நிறுத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மூலம் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும், வெற்றுப் பேச்சுகளை விடுத்து முதலமைச்சர் உடனே தன் மௌனத்தைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Nainar Nagenthran

49,405 görüntüleme • 1 ay önce

NainarBJP's profile picture

பழிவாங்கும் நடவடிக்கை ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல முதல்வர் திரு. TVK Vijay அவர்களே ! நடந்து முடிந்த இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட திருமதி. கார்த்திகா உட்பட அக்கட்சியின் நிர்வாகிகளை உங்கள் ஏவல்துறை இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்திருப்பது அப்பட்டமான அரசியல் அடக்குமுறையாகத் தான் தெரிகிறது. அரசியல் பேசும் பெண்களை அராஜகமாக அடக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. சூரியன் மறைந்த பிறகோ அல்லது சூரிய உதயத்திற்கு முன்போ பெண்களை கைது செய்யக் கூடாது என்ற பொதுவான சட்ட விதியை மீறி, அதிகாலை 5 மணிக்கு வீடு புகுந்து கைது செய்யுமளவிற்கு திருமதி. கார்த்திகா என்ன பயங்கரவாதியா? சம்மன் அனுப்பி சரண்டர் ஆக சொல்லாமல், இரு பெண் பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்மணியின் மீது இப்படியொரு அடக்குமுறை அவசியம் தானா? பொது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்ணிற்கு உங்கள் அரசு தரும் மரியாதை இதுதானா முதல்வரே? இப்படி மற்ற கட்சிக்காரர்களின் குறைகளை பூதக் கண்ணாடி வைத்து தேடிக் கொண்டிருப்பதால் தான், உங்கள் கட்சியில் பாலியல் குற்றவாளிகளும், போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது சட்டத்தை உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக பயன்படுத்தாமல், மக்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்துங்கள்!

Nainar Nagenthran

15,393 görüntüleme • 17 gün önce

NainarBJP's profile picture

திருப்பூரில் மக்களுக்குப் பயன்பாடற்ற இடத்தில் தார் சாலை அமைத்ததை எதிர்த்து புகார் அளித்த சமூக ஆர்வலரைத் திமுக பேரூராட்சித் தலைவர் திரு. பழனிசாமி கார் ஏற்றிக் கொன்றதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திராவிட மாடல் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டினால் மரணம் தான் பரிசளிக்கப்படுமா? 'திமுகக்காரன்' எனும் ஒற்றை அடையாளமும், பதவி அதிகாரமும் இருந்தால் ஒரு உயிரைப் பறிக்கும் உரிமை உண்டா? இதுபோன்ற குற்றங்கள் வெளிவரும்போது கண்துடைப்புக்காகத் தான் கைது நடக்கிறதே தவிர, கன்னித்தீவு தொடரைப் போலத் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றன. இப்படி நான்காண்டுகளாய் மக்கள் வாழ்வை நரகமாக்கிவிட்டு, அதனை எதிர்த்துக் குரல் கொடுப்போரின் உயிரையும் பறித்துவிட்டு, 'நாடு போற்றும் நல்லாட்சி' என்று பெருமை பேச திமுகவினர் நாண வேண்டும்!

Nainar Nagenthran

174,638 görüntüleme • 1 yıl önce

NainarBJP's profile picture

It is a shame that the DMK Government has named Waddels road in Chennai after Late Father Ezra Sargunam, a known-Hindu hater. The video I have attached is proof of the venom he has spewed against Hindus. He has openly instigated violence against Hindus. Is there no limits for DMK’s Minority appeasement politics? The people of Tamil Nadu are watching. I urge the TN Government to immediately rollback the decision to name Waddels Road after Father Ezra Sargunam. இந்து மத வெறுப்பாளரான மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது பெயரை சென்னையில் உள்ள வேடல்ஸ் சாலைக்கு வைத்தது திமுக அரசு செய்த வெட்கக்கேடான செயலாகும். அவர் இந்துக்கள் மீது தீவிர வெறுப்புணர்வை உமிழும் வகையில் பேசியவற்றை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம். இந்துக்கள் மீது வன்முறையைத் தூண்டும் விதத்திலும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். திமுகவின் சிறுபான்மை ஓட்டரசியல் எல்லையை மீறிப் சென்று கொண்டுள்ளது. தமிழக மக்கள் இவையனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். எனவே, வேடல்ஸ் சாலைக்கு பேராயர் எஸ்றா சற்குணம் பெயரை வைத்த இந்த முடிவை DMK அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Nainar Nagenthran

166,517 görüntüleme • 1 yıl önce

ரவுடியிஸ திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்! திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மீது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதை “ரீல்ஸ்” ஆகப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது. புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்வதைப் பார்க்கையில் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் பயமாகவும் உள்ளது. சகமனிதரை இரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது. பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தை தான் தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்திற்கும் கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டப்படும்! தமிழகம் மீட்கப்படும்!
0:41

Sensitive content

This media may contain sensitive content.

108,190 görüntüleme • 10 ay önce

NainarBJP's profile picture

இந்து பெண் தெய்வங்களை தொடர்ந்து இழிவுபடுத்துவோருக்கு, பிற மதக் கடவுள்கள் குறித்து விமர்சிக்க துணிச்சல் இருக்கிறதா? காலத்தைக் கடந்து பிரபஞ்சத்தை கட்டி ஆளும் பெண் தெய்வங்களை, ஓம் எனும் பிரணவ மந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு வணங்குவது தான் “ஓம் சக்தி, பராசக்தி” மற்றும் “ஓம் காளி, ஜெய் காளி” உள்ளிட்ட இந்துக்களின் வீர முழக்கங்கள். “அன்னையாக அவள் இருந்து நம்மை வழி நடத்துவாள்” என்ற நம்பிக்கையில் இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும், இந்துக்களுக்கு மெய்சிலிர்க்கும். புது உத்வேகம் பிறக்கும். அப்பேற்பட்ட இந்துக்களின் புனித மந்திரங்களை எதுகை மோனையாக திரித்து, திரு. TVK Vijay அவர்களும், திரு. Udhay அவர்களும் தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ளத் துடிப்பது அப்பட்டமான இந்துமத அழித்தொழிப்பு வெறி. இது கடும் கண்டனத்திற்குரியது. “மதச்சார்பின்மை” என்ற திரையின் பின்னால் ஒளிந்து கொண்டு, இந்துக்களின் மத அடையாளங்களை மட்டும் திட்டமிட்டு இழிவுபடுத்தும் அரசியல் கட்சிகள் எல்லாம், பிற மதங்களிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடப்பது ஏன்? “வசுதைவ குடும்பகம்” என்ற சகோதர உணர்வின்பால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்துக்கள், தங்களின் மதத்தின் பெயரால் யாரையும் புண்படுத்த மாட்டார்கள் என்ற அலட்சியத்தாலா? அல்லது பிற மதங்களைத் தொட்டால் தங்கள் வாக்கு வங்கி பலமாக அடிவாங்கி விடும் என்ற அச்சத்தாலா? இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து இழிவுபடுத்தியதால் தான் திமுக இன்று தனது ஆட்சியை இழந்து நிற்கிறது என்பதை, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்! இந்துக்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதை அடியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

Nainar Nagenthran

17,358 görüntüleme • 1 ay önce

NainarBJP's profile picture

“ஆய்வு” என்ற பெயரில் தவெகவினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! “ஆய்வு” என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதைக் குத்திக் காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் செல்வி. Virudhai Magal Keerthana -இன் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது. நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”. செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளை விட, கேமராமேன்களைக் கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையை தெரிந்து கொள்வது அவசியம். அதைவிட்டு விட்டு படிக்கும் பிள்ளைகளிடம் இப்படி தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது. எனவே, முதல்வர் திரு. TVK Vijay அவர்கள், களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்! மேலும், தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் செல்வி. கீர்த்தனா மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!n

Nainar Nagenthran

41,123 görüntüleme • 4 ay önce

NainarBJP's profile picture

திருக்கோவில் அன்னதானத்தில் புழுவை நெளியவிட்ட திரு. ஜோசப் விஜய் அரசு! திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மதியம் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் திருக்கோவிலின் சேவைக் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தத் திட்டமிட்டதில் காட்டிய அக்கறையை அன்னதான உணவின் தரத்தில் காட்டாதது ஏன்? திரு. ஜோசப் விஜய் அரசுக்கு திருக்கோவிலின் வருமானம் மட்டும் முக்கியம், பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா? அன்று முறுக்கு பாக்கெட்டு உற்பத்தித் தேதிக்கு ஆதாரம் கேட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. TVK Ramesh அவர்கள், இன்று புழு நெளிந்ததாக எழுந்துள்ள புகாரை எளிதாகக் கடந்து செல்லக் கூடாது! உடனடியாக புகாரை தீர விசாரித்து, அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் திரு. TVK Vijay அவர்கள் தலைமையிலான அரசை வலியுறுத்துகிறேன்!

Nainar Nagenthran

43,607 görüntüleme • 4 ay önce

NainarBJP's profile picture

விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் திரு. ஜோசப் விஜய் அரசு! முதல்வர் திரு. TVK Vijay பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ₹40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வந்த ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ₹1 கோடி இன்று வீணாகியிருக்கிறது. உலக நாடுகளே எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் வேளையில் இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் வேளையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா? "மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொடவிடவும் மாட்டோம்" என்று கூறிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும்! உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும்!

Nainar Nagenthran

40,953 görüntüleme • 4 ay önce

NainarBJP's profile picture

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது. பானையில் உள்ளது தானே குவளையில் வரும்? டாஸ்மாக்கை நம்பி மட்டுமே மொத்த அரசும் இயங்கும் திமுக ஆட்சியில், வகுப்பறைகள் வரை சாராய வெள்ளம் பாயத்தானே செய்யும்? கையில் மது புட்டியுடன் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களைக் கொண்ட இச்சமூகத்தில், மாணவர் கைகளில் பயங்கர ஆயுதங்கள் புழங்குவதை எப்படித் தடுக்க முடியும்? பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர் போதையில் மூழ்கிக் கிடப்பது, ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, சாதிகள் இல்லையடி என போதித்த வாயால் மாணவரின் சாதிப்பெயரை சொல்லித் திட்டுவது ஆகியவையெல்லாம் திமுக-வின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை நாசமாகிவிட்டதற்கான சான்றுகள். இப்படி அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறையையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் “பள்ளிக்கல்வித்துறை எனது கோட்டை” என சினிமா வசனம் பேசி விளம்பரம் தேடுவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு. Dr. Anbil Mahesh அவர்கள். நாடக முதல்வருக்கு வாய்த்த மிகச் சரியான விளம்பர அமைச்சர்! இவ்வாறு, தங்களது நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகத்தின் கல்வித்தரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்துவிட்டு, ஏழை எளிய மாணவர்களின் வளமான எதிர்காலத்தை இருட்டடிக்க முயலும் DMK அரசின் அத்தனை திட்டங்களையும் முறியடிப்போம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் திறனற்ற மக்கள் விரோத திமுகவைத் தக்க பதிலடி கொடுத்து வீட்டுக்கு அனுப்புவோம்!

Nainar Nagenthran

112,881 görüntüleme • 1 yıl önce

NainarBJP's profile picture

இன்று, சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக இளைஞர் அணித் தலைவர் திரு. Dr.SG Suryah அவர்கள் மீதும், இளைஞர் அணி நிர்வாகிகள் மீதும் திமுக ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த நான்கரை வருடங்களாக திமுக ஆட்சியின் கோரமுகத்தைக் கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை எண்ணி பயம் தொற்றிக் கொண்டதால், இதுபோன்ற வன்முறையினைக் கையில் எடுத்துள்ளனர் திமுகவினர். விவாதங்களில் மக்கள் பிரதிநிதியாகக் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட வன்முறையையே பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதற்குச் சமம். தமிழக முதல்வர் திரு. M.K.Stalin அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்.

Nainar Nagenthran

70,061 görüntüleme • 10 ay önce

NainarBJP's profile picture

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது வரும் 2026 ஆம் ஆண்டு முதற் கட்ட பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நமது மத்திய அரசு பலமுறை உறுதியளித்தும், திமுக தலைவர்கள் மக்களிடையே தொடர்ந்து தவறான பொய் பரப்புரைகளைப் பரப்புவது ஏற்புடையதல்ல. மதுரை எய்ம்ஸ் கட்டிடப்பணிகள் குறித்த காணொளியை இந்தப் பதிவுடன் இணைத்துள்ளதோடு, மாண்புமிகு முதல்வர் திரு. M.K.Stalin விரும்பினால் அவரை நேரில் அழைத்து சென்று காண்பிக்கவும் தயாராக உள்ளேன். ஆகவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் மூலம் தமிழக மக்களைக் குழப்பி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை திமுக-வினர் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Nainar Nagenthran

101,594 görüntüleme • 1 yıl önce

NainarBJP's profile picture

குழந்தைகளை வதைக்கும் உரிமையை மதபோதகருக்கு அளித்தது யார்? திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மதரஸா பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கி தூக்கி வீசும் காணொளி வெளியாகியுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. காணொளியைப் பார்த்த பின், "படிக்க வந்த சிறுவனைத் தூக்கியெறியும் அளவிற்கு அப்படி என்ன தவறு நிகழ்ந்தது? மதபோதனைக்காக வந்த சின்னஞ்சிறு மாணவர்களை இப்படி அடித்து உதைக்கும் உரிமை யார் அளித்தது? இது போல எத்தனை மதப் பள்ளிகளில் நம் பிள்ளைகள் துன்புறுத்தப்படுகின்றனர்?" போன்ற எண்ணிலடங்காத கேள்விகள் மனதைத் துளைக்கின்றன. மதச்சார்பின்மையின் பாதுகாவலராகவும் தமிழகப் பிள்ளைகளின் "அப்பா" என்றும் தம்மை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட மதரஸா பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Nainar Nagenthran

63,759 görüntüleme • 11 ay önce

NainarBJP's profile picture

“ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்த நபர்களை TVK Party HQ அரசு தீர விசாரிக்க வேண்டும்! “பாரத் மாதா கி ஜெய் என்று சொன்னால் ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்" என இரு இளைஞர்கள் காவல் துறையினர் முன்பே மிரட்டல் விடும் காணொளியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். சுதந்திர இந்தியாவில் "பாரத் மாதா கி ஜெய்" முழக்கத்தை கேட்டு கொதித்தெழும் அளவிற்கு இந்த இளைஞர்களின் மூளை எவ்வாறு சலவை செய்யப்பட்டது என மனம் குழம்புகிறது. சுற்றிலும் காவல்துறையினர் இருக்கும் போதே பயங்கரவாத தொனியில் மிரட்டும் அளவிற்கு இவர்களுக்கு தைரியம் கொடுத்தது யார்? தமிழக இளைஞர்களை தேச விரோதிகளாக மாற்ற ஏதேனும் பயங்கரவாத இயக்கம் பின்னிருந்து செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து சென்றுவிட்டு, பின்பு விடுதலை செய்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த இளைஞர்களின் பின்னணியையும் அவர்களின் தீவிரவாத சிந்தனையையும் காவல்துறையினர் முறையாக தீர விசாரிக்க வேண்டும். மேலும், தமிழகத்தின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் நேராத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசை BJP Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்.

Nainar Nagenthran

13,553 görüntüleme • 1 ay önce

NainarBJP's profile picture

“நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட திரு. Rajmohan அவர்களே! நேற்று கரூரில் நடந்த விழாவில் “Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்” என்று பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்துக் கடவுள்களை வேண்டுமென்ற ஒதுக்கிய, உங்களைப் போன்ற இந்துமத வெறுப்பாளர்கள் உள்ளவரை, “மதநல்லிணக்கம்” என்பது சமூகத்தில் மருந்திற்கும் படராது. “அனைவருக்குமான ஆட்சி” என்று கூறிக்கொண்டு இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையை காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த ஆண்டு உங்கள் தலைவரைப் பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் சிக்கி, சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அப்பொழுது நேரில் வந்து ஆறுதல் சொல்லத் திராணியின்றி ஓடி, ஒளிந்த நீங்களும் உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நேற்றைக்கு தான் வழி கண்டுபிடித்து கரூருக்கு வந்தீர்கள். அப்படியிருக்கையில் வந்த வேலையை விட்டு விட்டு, ஆறுதல் கூறும் நிகழ்விலும் கூட, இந்துக்களின் மீது இப்படியொரு வன்ம அரசியலைத் தொடுக்கும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் என்றுமே மன்னிக்காது. காரணம், தமிழகம் அடிப்படையில் ஓர் ஆன்மீக பூமி. நாம் காலங்காலமாக போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்துக் கடவுள்களையே ஆராதிக்கின்றன. ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “வாக்கு வங்கி”யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் TVK Vijay அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்!

Nainar Nagenthran

26,029 görüntüleme • 3 ay önce