
Thol. Thirumavalavan
@thirumaofficial • 767,070 subscribers
MP (15th,17th,18th LS), 3rd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi(VCK) BSc (Chem), MA (Criminology), BL, Phd (Doctorate in MassConversion)
Shorts
Videos

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது. வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதன் முதலாக உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை! அரசு வேலைக்கான நியமன ஆணையை என்னிடம் காண்பித்து தம்பி கவினின் குடும்பத்தினர் நன்றி கூறினர்!
Thol. Thirumavalavan311,002 просмотров • 5 месяцев назад

இன்று அம்பேத்கர் திடலில் செய்தியாளர் சந்திப்பில்...
Thol. Thirumavalavan84,084 просмотров • 1 месяц назад

'சனநாயகத்தை பாதுகாத்திட: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், ஞானேஷ்குமார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அனைத்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணியை சார்ந்த 250 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்றோம்!
Thol. Thirumavalavan36,423 просмотров • 20 дней назад

இந்தியா கூட்டணி கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ' சனநாயகத்தை பாதுகாப்போம் ' என்கிற முழக்கத்தோடு ராஷ்டிரபதி பவன் வரையில் பேரணியாக சென்று குடியரசுத் தலைவர் அவர்களை சந்தித்து 'தலைமை தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளை முற்றாக ரத்து செய்ய வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தோம்!
Thol. Thirumavalavan22,670 просмотров • 17 дней назад

தற்போது புதுதில்லி ஜன்பத் என்னுமிடத்தில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி இங்கிருந்து ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மூன்று பேருந்துகளில் செல்கிறோம்! 'சனநாயகத்தை பாதுகாத்திட: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், ஞானேஷ்குமார் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அனைத்து எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் சார்பில் ஜந்தர்மந்தரில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
Thol. Thirumavalavan24,363 просмотров • 20 дней назад

தேர்தல் சனநாயக படுகொலையை கண்டித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்களின் பதவி நீக்கத்தை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பில் 'சனநாயகம் காப்போம்' என்னும் தலைப்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இடம் : எழும்பூர்
Thol. Thirumavalavan15,601 просмотров • 12 дней назад

நடிகர் விஜய் அவர்களின் மாநாட்டு உரை குறித்து சற்று முன் ஊடகவியலாளர் எழுப்பிய வினாக்களுக்கு விடையிறுத்தேன். ஃபாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான். அவரோ "அவங்க ஃபாசிசம் என்றால் நீங்க பாயசமா " என்று ஃபாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார். ஃபாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா ? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை முன்னிறுத்துவதாலும்; "பிளவுவாதத்தை எதிர்ப்போம்" என கூறுவதாலும்; அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டால், ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏனென்ற கேள்வி எழுகிறது.
Thol. Thirumavalavan532,805 просмотров • 2 лет назад

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்கத்துடிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து தி.மு.க தலைமையிலான கூட்டணியின் சார்பில் இன்று (18-02-2025) சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினேன்! #StateRights #StopHindiImposition
Thol. Thirumavalavan431,672 просмотров • 1 год назад