
K.Annamalai
@annamalai_k • 1,079,673 subscribers
அறம் செய்ய விரும்பு. A common man in search of good politics!
Shorts
Videos

நமது We The Leaders Foundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரும்புகிறீர்களா? என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும். தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவோம்.
K.Annamalai137,320 views • 3 days ago

Thank you, my dear leaders of We The Leaders Foundation and respected dignitaries, for making this day memorable! Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level. Here’s a glimpse of today’s event.
K.Annamalai55,637 views • 3 days ago

யாரைப் பார்த்தும் நமக்குப் பயமில்லை. ஏனென்றால், நாம் வந்திருப்பது போட்டி அரசியல் செய்வதற்காக அல்ல. அரசியல் புரட்சியை உருவாக்கும் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்காக. நமது பணிகள் பேச வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக நாம் ஆற்றும் சமூகப் பணிகளைப் பார்த்து, மக்களுக்கும் நம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உருவாக வேண்டும். மக்களுக்காகப் பணியாற்றுவோம். மக்களுடன் இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்.
K.Annamalai37,400 views • 2 days ago

பெரியாரின் அனைத்துக் கொள்கைகளையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில், அவரது கடவுள் மறுப்பு, பிராமண துவேஷம் உள்ளிட்டவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் ஆட்சிக்கு வரும்போது, ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பெரியார் அவர்களின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, உரிய மரியாதையுடன், பொது இடத்தில் வைக்கப்படும் என்று நான் கூறியதில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை.
K.Annamalai411,575 views • 28 days ago

நமது We The Leaders Foundation அமைப்பு அரசியல் இயக்கமாக மாறும்போது, இது போன்ற கட்சி நமக்கு வேண்டும் என்று மக்கள் கூறும்படி, நமது கட்சி உருவாக வேண்டும். தமிழகத்தில் உள்ள 12,525 பஞ்சாயத்துகளில் உள்ள, சுமார் 8 லட்சம் பஞ்சாயத்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும். உள்ளாட்சித் தேர்தலில் நாம் முதலில் போட்டியிடுவோம். அதன் பின்னர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும், நமது அரசியல் இயக்கம் போட்டியிடும். ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவாகும் அடிப்படைப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
K.Annamalai69,703 views • 5 days ago

நமது We The Leaders Foundation அமைப்பின் அடிப்படைக் கோட்பாடு, அனைவரும் சமம் என்பதைக் கடந்து, அனைவரும் தலைவர்கள் என்பதே. இந்தப் பயணத்தில் ஒவ்வொருவரின் உறுதுணையும், அர்ப்பணிப்பும் மிக அவசியம். புதிய தன்னார்வலர்களைத் தொடர்ந்து இணைத்து, எதிர்பார்ப்பில்லாத சமூகப் பணிகளின் மகத்துவத்தை அவர்களுக்கும் அறிமுகப்படுத்தி, சமூக மாற்றத்திற்கான இந்த மக்கள் இயக்கத்தை இன்னும் வலிமையாக்குவோம்.
K.Annamalai35,136 views • 2 days ago

நமது We The Leaders Foundation தலைவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தைக் கடந்து விட்டது. 30 லட்சம், 40 லட்சம் என வளர்ந்து, நிச்சயம் 50 லட்சத்தையும் கடப்போம். தொடக்கத்தில் நம்மிடம் இருந்த அதே உத்வேகம், அர்ப்பணிப்பு, போராட்டக் குணம் இறுதிவரை நம்மிடம் இருக்க வேண்டும். இது ஒரு புரட்சிகரமான இயக்கம். இந்த இயக்கத்தின் நோக்கத்தையும் உணர்வையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. மாற்றத்திற்கான இந்தப் பயணம் இன்னும் பல லட்சம் தலைவர்களை உருவாக்கட்டும்.
K.Annamalai35,320 views • 2 days ago

கடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்களிடம் நாம் யாருக்காக வாக்களிக்கக் கேட்டோமோ, அவர்கள், வாக்களித்த மையின் ஈரம் காயும் முன்பாகவே, கட்சி மாறிச் சென்று விட்டார்கள். இது போன்ற மோசமான அரசியலை மாற்றவே நமது We The Leaders Foundation களத்தில் இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உள்ளூர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கும் நமது தலைவர்களை, உள்ளூரில் இருந்தே உருவாக்குவோம்.
K.Annamalai58,682 views • 5 days ago

On International Day of the Girl Child, joined our spirited sisters for a 6.5 km Health Awareness Marathon in Avinashi this morning, organised by We The Leaders Foundation to mark Women Safety and Empowerment Month, our dedicated theme for the month of October. More than 10,000 women & children participated in the marathon today with incredible zeal and energy. When our women are healthy, safe, and empowered, our society thrives. It is truly inspiring to see such immense enthusiasm for health and fitness among our sisters.
K.Annamalai75,176 views • 8 days ago

இன்றைய தினம் காலை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில், நமது We The Leaders Foundation சார்பில், 11 ஏக்கர் பரப்பளவில் ‘திருவனம்’ எனும் 15,000 மரக்கன்றுகளை நடும் மாபெரும் விழாவில் பங்கேற்று, இந்தப் பசுமைப் பயணத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மரங்களை நடுவது என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைகளுக்கான நமது கடமையும் கூட. மண்ணின் வளத்தைப் பாதுகாப்பது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது, இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாப்பது ஆகியவை நம் ஒவ்வொருவரின் கடமையாகும். கடந்த மாதங்களில், தமிழகம் முழுவதும் நமது We The Leaders Foundation முன்னெடுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் 2,700-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு, 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மக்கள் இயக்கம் தொடரட்டும். மரங்களை வளர்ப்போம், மண்ணைக் காப்போம், பசுமையான, வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
K.Annamalai45,046 views • 5 days ago

இந்தியாவில் முதன்முறையாக, 1956-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் கற்றுத் தருவதற்கான பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர் அந்த இயக்கம் தொடர முடியாமல் போய்விட்டது. ஐயா அப்துல் கலாம் பெயரிலான Centre for Ethics & Politics குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, அவரது குடும்பத்தினரிடம் உரிய அனுமதியைப் பெற்றோம். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் முன்னெடுத்த அரசியல் கல்விச் சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை மக்கள் இயக்கமாக மாற்றி, அரசியலை அதிகாரத்திற்கான கருவியாக அல்லாமல், சமூக மாற்றத்திற்கான வழியாகக் கருதும் புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம்.
K.Annamalai21,931 views • 3 days ago

வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் தொடங்கவிருக்கும் பயிற்சி மையத்தில், அரசியல் குறித்தும், இளைஞர்களின் தலைமைப் பண்பை வெளிக் கொண்டுவரும் விதத்திலும், பயிற்சிகள் வழங்கப்படும். அதன் மூலம், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது இளைஞர்கள், தங்களது பணிகள் குறித்து நன்கு தெரிந்து போட்டியிடுவார்கள். அரசியலுக்கு சினிமா நடிகர்கள் வருவது தவறல்ல. மக்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிப்பார்கள். ஆனால், வரும் 2031 தேர்தலில், எதற்காக வாக்களிக்கிறோம் என்பது தெரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். அதற்கான பணிகளில்தான் நமது We The Leaders Foundation அமைப்பு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
K.Annamalai39,987 views • 5 days ago

TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox! Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did. How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu? Very confusing bro! Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
K.Annamalai778,854 views • 5 months ago

முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் சென்று வந்துள்ளார் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள். இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சியே 1% தான். அங்கு முதலீடு செய்வதே, மஹிந்திரா உள்ளிட்ட நமது இந்திய நிறுவனங்கள்தான். எனவே, முதலமைச்சர் வெளிநாடு செல்வதை விட்டுவிட்டு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள, நமது தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுத்து, முதலீடு செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
K.Annamalai128,066 views • 28 days ago

தமிழகத்தில் தற்போது நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம். நாம் தேர்தலைச் சந்திக்கும்போது, பிரச்சாரத்துக்குச் செல்லாமலேயே நாம் வெற்றி பெறுவோம் என்ற அளவுக்கு, நமது பணிகள் மூலம் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும். மாற்றத்தைக் கொடுப்போம் என்ற நம்பிக்கையை உருவாக்குவது மட்டுமல்ல, நாம் ஆட்சிக்கு வரும்போது மக்கள் விரும்பும் மாற்றத்தை செய்தும் காட்ட வேண்டும்.
K.Annamalai62,422 views • 16 days ago

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது? இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது. இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது.
K.Annamalai366,164 views • 3 months ago

When innocent Indians were killed in Pahalgam in a cowardly terror attack sponsored by Pakistan, the DMK and its alliance partners did not take to the streets to condemn the perpetrators and their sponsors. Yet yesterday, a protest unfolded in Chennai under full police protection, a privilege rarely extended to teachers, nurses, sanitation and anganwadi workers, government employees, or common people, who are routinely detained the moment they raise their voices in protest. For DMK, appeasement is always at the top of their priority list!
K.Annamalai795,377 views • 7 months ago

கடந்த இரண்டு மாதங்களில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், நமது We The Leaders Foundation தலைவர்கள் இணைந்து, தமிழகம் முழுவதும் பன்னிரண்டு லட்சத்து எழுபத்திரண்டாயிரம் மரங்களை நட்டிருக்கிறோம். சுமார் 600 டன் குப்பைகளை அகற்றியிருக்கிறோம். வைகை, காவிரி, சண்முகா நதி உள்ளிட்ட நதிகளைச் சுத்தம் செய்யும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான 175 கிலோமீட்டர் தொலைவு கடற்கரையைச் சுத்தம் செய்து வருகிறோம்.
K.Annamalai54,038 views • 16 days ago
