
Milton
@Milton_Off • 18,202 subscribers
அன்பு செய்
Shorts
Videos
0:42
Sensitive content
This media may contain sensitive content.

அமைச்சர் ஆதவ் அர்ஜூன் தனது சொந்த வீட்டில் இருந்து அரசு வேலை பார்ப்பதால், அவர் அரசாங்கத்திடம் அவரது “சொந்தவீட்டிற்கே வீட்டு வாடகை” வசூல் செய்து கொள்கிறார்.! “அது Protocol தான், அதை வேணாம்னு எழுதிக்குடுங்க” என முன்னாள் அமைச்சர் கே என் நேரு சொன்னவுடன்… பதில் சொல்ல தெரியாமல் “அதைத்தான் நாங்களும் சொல்றோம்” என சிரித்து மழுப்பிக்கொண்டு இருக்கிறார் ஆதவ்…🤣🤣
Milton147,776 次观看 • 2 个月前

சென்ற ஆட்சியில் இத்தகைய கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளான நபர் யார் தெரியுமா? தற்போது அமைச்சர் வன்னி அரசு மீது குற்றம் சாட்டியுள்ள இதே “பாரதிதாசன் ராமன்” தான். சென்ற ஆட்சியில் இவரிடம் ஆணவத்தோடு பேசிய அதிகாரியை குறிப்பிட்டு இதே மாணவர் அப்போதைய “தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் துணைத் தலைவர் தோழர் இமையம்” மூலம் தமிழ்நாடு அரசுக்கு புகார் அளித்துள்ளார். புகாரை கேட்டு அதிர்ந்த திமுக அரசின் அப்போதைய முதல்வர் M.K.Stalin சற்றும் தாமதிக்காமல் அந்த அதிகாரியின் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து தண்டித்திருக்கிறார். அதை பாதிக்கப்பட்ட மாணவர் பாரதிதாசனே நமது பேரலை பேட்டியில் குறிப்பிட்டும் இருக்கிறார். (வீடியோ ஆதாரம் இணைத்துள்ளேன்) அன்றைக்கு ஒரு அதிகாரி பேசியதை இன்றைக்கு தவெக விசிலடிச்சான் குஞ்சுகளும், ஆதவ் அல்லக்கைகள் சிலதும், விசிக வினர் சிலரும் “MacBook Pro கேக்குதா, 12,000க்கு ஷூ கேக்குதா” என மாணவரை நோக்கி அருவெருப்பாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக இந்த திட்டம் குறித்தும் இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்தும் தேடிப்படித்து பார்க்கிறேன். பயன் பெற்றுவரும் மாணவர்கள் 6 பேருக்கும் மேல் பேசிக்கொண்டு இருக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் ஆத்மார்த்தமாக இந்த திட்டத்தை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். அதில் ஒரு அதிகாரியிடம் பேசும் சொன்னார் “Stalin உடைய Super Work sir… First கல்வி உதவித்தொகை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான அளவு ₹3 லட்சம் ஆ இருந்தது. அவரு அத ₹12 லட்சம் ஆ உயர்த்துனாரு. அதுக்கு பிறகு தான் சார் நிறைய பசங்க Apply பண்ணாங்க. அவரு இந்த திட்டத்துல வெளி நாட்டுக்கு நிறைய பசங்கள அனுப்பனும் பயன் பெற வைக்கணும்னு ஒவ்வொன்னையும் சிரத்தை எடுத்து பாத்தாரு சார்”னு சொன்னார். இப்போது எத்தகைய கோமாளிகளிடம் சிக்கி இருக்கிறோம் என நினைத்து பார்க்கிறேன்.
Milton139,463 次观看 • 2 个月前

இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் நியாயவான்களே…! இரண்டாம் பக்கத்தில் 3 ஆம் பத்தியில் “20.08.2026 மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது, ஆனால் இதுவரை சரியான விளக்கம் மாணவரால் அளிக்கப்படவில்லை” என குறிப்பிட்டு இருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு. அப்படியானால் மாணவர் ஏதோ விளக்கம் அளித்திருக்கிறார் அதை சமூகநீதி துறை சரியான விளக்கமாக ஏற்க வில்லை என்று தானே பொருள். விசாரித்ததில் அந்த மாணவர் 26 ஆம் தேதி விளக்கம் அளித்திருக்கிறார். அந்த விளக்கம் சரியாக இல்லை எனில் அந்த தகவலை மாணவரிடம் தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா! இது சரியான விளக்கம் இல்லை என்றோ தவறான தகவல்கள் உள்ளது என்றோ, இதை மாற்ற வேண்டும் என்றோ, இதை நாங்கள் நம்பவில்லை என்றோ அந்த மாணவருக்கு பதில் அனுப்பி இருக்க வேண்டும் தானே?! அனுப்பினீர்களா அமைச்சரே…? “26 ஆம் தேதி நாம் அனுப்பிய தரவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது போல, Mail Accept ஆகிவிட்டது போல எப்போது வேண்டுமானாலும் பணம் வந்துவிடும்” என 22 நாளாக ஆய்வுப்பணத்தை நம்பி இருந்த மாணவன் ஏமார்ந்து அழுது 17.09.2026 அன்று அதாவது 22 நாள் கழித்து, வீடியோ வெளியிடுகிறான். அது வைரல் ஆன பிறகு தான், மாணவர் அளித்த விளக்கம் சரியாக இல்லை என ஒரு அறிக்கையை வெளியிடுகிறீர்கள். அதை பார்த்து தான் அந்த மாணவருக்கு தன்ணுடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிகிறது. இன்று அந்த மாணவன் வீடியோ வெளியிடாமல் இருந்திருந்தால், இன்னமும் அந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றீர்களா? மறுத்தீர்களா என்று மாணவருக்கே சொல்லி இருக்க மாட்டீர்கள் தானே? வன்னி அரசு தூக்கம் வரல தோழர் அதிகாரிகளின் ஈகோவை விட ஒரு மாணவனின் உரிமையும் உயிரும் மேலானது தோழர். 🙏
Milton87,567 次观看 • 1 个月前

ஐயோ பாவிகளா… வேண்டாம் டா விடுங்கடா… ரொம்ப அருவெறுப்பா இருக்குடா உங்கள நினச்சா… இறந்தவர்கள் யார்னு எங்களுக்கு எப்படி தெரியும்? தவெக நிகழ்வுக்கு தான் வந்தாங்கனு எத வச்சு முடிவு பண்ணீங்க? யாரோட பொணத்தையோ எடுத்து இதுல செத்ததா கணக்கு காட்டுறீங்களா?னு விஜய் தரப்பு வக்கீல் கேக்குறாரு…😰 ஆதவ் அர்ஜூன் இத கோர்ட்ல வேற சொல்லிருக்காராம் 😑 இத சொல்ல நாக்கு கூசலயா..?! விஜய பாக்க எவ்வளவு ஆசையா வந்த கூட்டம் டா அது… ஒவ்வொருதனும் Social Media ல Whatsapp Groupல தன்னோட போட்டோவ வீடியோவ போட்டு கொண்டாடிகிட்டு இருந்துருக்கான்டா… மூச்சு திணறி மயக்கம் போட்ட பிறகு கூட்டத்துல இருந்து ஆம்புலன்ஸ புக் பண்ணி, கூட இருந்தவங்க குடும்பத்துக்கு தகவல் சொல்லி, வந்தவங்க ‘விஜய பாத்துட்டு வரேன்னு சொல்லி கிளம்புனான் பொணமா வந்துட்டானே’னு கதறுன அழுகுரல் ஓலம் எல்லாம் காதுலயே நிக்கிதே டா பாவிகளா…! எப்டிடா பொய் சொல்லி கழட்டி விட மனசு வந்தது உங்களுக்கு..?! இது கட்சியா 💦
Milton450,324 次观看 • 1 年前

ஆய்வு மாணவர் பாரதிதாசன் தனக்கான கல்வித்தொகை கிடைக்க துணை நின்ற திமுக தலைவர் M.K.Stalin அவர்களையும், எதிர்கட்சித்தலைவர் Udhay அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லி AIIMSல் ஒரு ஆய்வாளர் பாரதிதாசனுடைய ஆய்வை பார்த்துவிட்டு, “எப்படிங்க மூளைல Research!? செலவு ரொம்ப ஆகுமே? யாருங்க தமிழ்நாட்டுல இதுக்கு Sponsor?!” என ஆச்சர்யமாக கேட்டதற்கு “எங்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அண்ணல் அம்பேத்கர் அயலக உதவித்திட்டம் மூலமா படிக்கிறேன். அரசாங்கமே என்னோட ஆய்வு செலவ கொடுத்துவாங்க”னு சொன்னதும், கேள்வி கேட்டவரு மிரண்டு போயி “வாவ் சூப்பர் Bro வாழ்த்துகள்”னு வாய் அடச்சு போயிருக்காரு. இந்த செய்தியை கிளம்புறதுக்கு முன்னாடி எழுந்து நின்னு பாரதிதாசன் சொல்லும் போது, திமுக தலைவர் கண்ணுல அவ்வளவு சந்தோஷம்… பாரதிதாசன் கைய இறுக பிடிச்சு, “நல்லா படிங்க நான் இருக்கேன். எந்த பிரச்சனையையும் உங்க தலைல ஏத்திக்காதீங்க, எதுனாலும் சொல்லுங்க” ன்னாரு. பாரதிதாசன் கண்ணில் அத்தனை சந்தோசம் 🥹 அதே நம்பிக்கையை அதே வார்த்தைகளில் எதிர்கட்சித்தலைவரும் கொடுத்திருக்கிறார்..! ❤️ கல்வியே நமக்கான ஆயுதம்…!
Milton21,862 次观看 • 19 天前

சென்ற ஆட்சியில் கவின் படுகொலை செய்யப்பட்டபோது, திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்த விசிக தலைவர் திருமாவை குறிப்பிட்டு “எங்க தலைவன் டெல்லில இருக்காரு அவரு எங்களுக்காக வருவாரு”னு நம்பிக்கையாக பேசிய குடும்பம், இன்று அதே தலைவர் ஆளுங்கட்சியாக அரசு அதிகாரத்தில் பங்கு வகிக்கும் போது “இந்த அரசு கொலையாளியை பாதுகாப்பதாக” கண்ணீர் விட்டு கதறி காத்திருப்பு போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறது… விஜய்யிடம் பேசியோ/போராடியோ நீதி பெற்றுத்தர வேண்டிய எழுச்சித்தமிழர் இன்னமும் “நான் ஏன் தவெக கூட்டணிக்கு வந்தேன்” என அவரையே அவர் நம்பவைக்க மேடைக்கு மேடை போர் அடித்துக்கொண்டு இருக்கிறார்.
Milton34,798 次观看 • 1 个月前

கைதாகி உள்ள IPDS திருநாவுக்கரசு மே 6 ஆம் தேதி கொடுத்த பேட்டி, “ விஜய்யின் ஆலோசகர்கள் எல்லாம் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள்… ஆதவாகட்டும் ஜான் ஆரோக்யசாமி ஆகட்டும் எல்லாரும் தொடர்பில் இருக்கிறார்கள். ஏன்னா நாங்களாம் Loyola செட்… தேர்தல் தான் முடிஞ்சுருச்சே வெளிப்படையா சொல்றதுக்கு என்ன” என்று பெயர்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். (விஜய்க்கு சாதகமாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பையும் இவர் வெளியிட்டு இருந்தார்)
Milton102,435 次观看 • 4 个月前
0:35
Sensitive content
This media may contain sensitive content.

“Plastic Chair” என்கிற உதாரணத்தை பேசுவது பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் அல்ல… அமைச்சர் ராஜ்மோகன். காவலர்கள் தாக்கி மரணித்த அஜித்குமார் இழப்பின் போதும் இதே மாதிரியான உடல் மொழியோடு தான் நடிகர் அஜித்குமாரை குறிப்பிடும் படி மேடையில் பூடகமாக பேசினீர்கள். எதுகை மோனை க்காக இன்னமும் இதே முறையை தொடர்கிறீர்கள்.😖 அமைச்சராகி விட்டீர்கள் Rajmohan பொறுப்போடும் கண்ணியத்தோடும் உதாரணங்களை குறிப்பிட்டு பேசுங்கள்.! பட்டிமன்றத்தில் கணவன் மனைவி காமெடி உதாரணம் காட்டுவதை போல பேசுவதை தவிருங்கள்.🫡
Milton95,313 次观看 • 4 个月前

