Dr.SG Suryah's banner
Dr.SG Suryah's profile picture

Dr.SG Suryah

@sgsuryah • 147,083 subscribers

Proud RSS Swayamsevak & BJP Karyakarta | State President, Youth Wing, BJP Tamil Nadu | மாநிலத் தலைவர், இளைஞரணி, பாரதிய ஜனதா கட்சி | Pune ILS Law School Alumni |

Shorts

Without getting into the other parts of the post, the sole focus here is whether PM Narendra Modi’s 2011 statement is being correctly interpreted. It is vastly misinterpreted. In 2011, then-CM Modi clearly used the Hindi phrase "bahut badi ladai" (a massive fight/struggle), stating he would have gone to Delhi to fight against the brutal midnight crackdown on peaceful protestors. He was responding specifically to the unjust midnight police crackdown on peaceful, sleeping citizens at Ramlila Maidan. The current situation of #CJP being compared to it is entirely different. Today's issues are protests occurring in denotified areas, instances where criminal elements infiltrated the crowd to cause riots and unrest. Equating a 2011 call for a democratic fight for justice with a "war" against the state is a severe misrepresentation of both his words and the historical context.

Without getting into the other parts of the post, the sole focus here is whether PM Narendra Modi’s 2011 statement is being correctly interpreted. It is vastly misinterpreted. In 2011, then-CM Modi clearly used the Hindi phrase "bahut badi ladai" (a massive fight/struggle), stating he would have gone to Delhi to fight against the brutal midnight crackdown on peaceful protestors. He was responding specifically to the unjust midnight police crackdown on peaceful, sleeping citizens at Ramlila Maidan. The current situation of #CJP being compared to it is entirely different. Today's issues are protests occurring in denotified areas, instances where criminal elements infiltrated the crowd to cause riots and unrest. Equating a 2011 call for a democratic fight for justice with a "war" against the state is a severe misrepresentation of both his words and the historical context.

21,950 views

Videos

sgsuryah's profile picture

விவாத மேடையில் நான் முன்வைத்த தரவுகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியில்லாத இந்த Senthil, பாதியிலேயே வெளியேறி அதன் பின்னர் செய்தது அப்பட்டமான ரவுடிசம்! என்னுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத கோபத்தில், வெளியே சென்று அமைச்சர் P.K. Sekar Babu-வைத் தொடர்புகொண்டு, திமுக குண்டர் படையை வரவழைத்துத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது இவரே. மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், திட்டமிட்டு 10 நிமிடங்கள் மின் இணைப்பைத் துண்டித்து, அந்த இருட்டில் காவல்துறையின் முழு உடந்தையுடன் என் மீதும், என் தம்பிகள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்த வழிவகை செய்துள்ளார். விவாத அறையில் பத்திரிகையாளர் வேடம், வெளியே வந்தால் திமுகவின் கூலிப்படைத் தலைவன்! பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, மாற்றுக் கருத்துடையவர்களை வன்முறையால் ஒடுக்க நினைக்கும் இவரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்! #DMKFails

Dr.SG Suryah

149,962 views • 9 months ago

sgsuryah's profile picture

நெஞ்சை உலுக்கும் கொடூரம்! தவறான மருத்துவ சிகிச்சையால் தனது சொந்த மகளின் பாதத்தை நிரந்தரமாக இழந்து தவிக்கும் ஒரு தந்தையின் கண்ணீர் போராட்டம் இது! பல ஆண்டுகளாக நீதி கேட்டும் கிடைக்காத விரக்தியில், இன்று வீதிக்கு வந்து ஆளும் கட்சியின் கொடியை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் ஒரு காவல்துறை அதிகாரி. இந்த விடியா திமுக ஆட்சியில் ஒரு காவலருக்கே இந்த கதி என்றால், சாதாரண சாமானிய மக்களின் நிலை என்ன? மக்களின் உயிரோடும் உறுப்புகளோடும் விளையாடுவது தான் #திராவிடமாடல் ஆட்சியா திரு.M.K.Stalin அவர்களே? நியாயம் கேட்டுப் போராடும் ஒரு கண்ணீர் வடித்த தந்தையை, சக காவலர்களை வைத்தே அடக்குமுறை செய்வது தான் உங்கள் சாதனையா? பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும்! அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! #DMKFails

Dr.SG Suryah

18,844 views • 6 months ago

sgsuryah's profile picture

தமிழகத்தில் தலைவிரித்தாடும் லாட்டரி விற்பனை! ​தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை இப்படி பட்டவர்த்தனமாக பொதுவெளியில் நடக்கிறது என்றால், குற்றவாளிகளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? ​பல ஏழை, எளிய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி பாழாக்கும் இந்த லாட்டரி கலாச்சாரம் மீண்டும் பகிரங்கமாகத் தலைதூக்கியுள்ளது. ​இதற்குப் பின்னால் அமைச்சர் திரு.Aadhav Arjuna அவர்களின் தூண்டுதல் இருக்குமோ என்ற கடுமையான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனையை அரசு உடனடியாக இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்! #TVKFails

Dr.SG Suryah

12,652 views • 4 months ago

sgsuryah's profile picture

ஊர் வம்பை விலைக்கு வாங்குவதையே பிழைப்பாகக் கொண்டு திரியும் மதக்கலவர வியாபாரி thirumurugan gandhi, முதலில் திருப்பரங்குன்றம் மண்ணின் மகத்துவத்தைத் தெரிந்த பின்னர் பேச வேண்டும். உச்சிப்பிள்ளையார் சன்னதி என்பது முன்னோர்களுக்கும், இறந்தவர்களுக்கும் விளக்கு ஏற்றும் இடமாகத்தான் அந்த ஊர் மக்களால் காலாகாலமாகப் பார்க்கப்படுகிறது. மங்களகரமான கார்த்திகை தீபத்தை, இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் இடத்தில் ஏற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது என்ன நியாயம்? இதை "பார்ப்பனத் திமிர்", "ஆரிய சதி" என்று திரித்துப் பேசுவது உன் புத்தியின் ஈனத்தனத்தையே காட்டுகிறது. ஊர் மக்களின் நம்பிக்கையை மதிக்கத் தெரியாத நீயெல்லாம் ஒரு மனிதனா? காலாகாலமாக கார்த்திகை தீபம் அங்கே இருக்கும் தீபத்தூணில்தான் ஏற்றப்பட்டு வருகிறது. அதுதான் ஆகம விதி, அதுதான் அந்த மண்ணின் சம்பிரதாயம். அதை மாற்றி, "நான் உச்சிப் பிள்ளையார் தலையில்தான் ஏற்றுவேன், இல்லையென்றால் கலவரம் செய்வேன்" என்று அடம் பிடிப்பது, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க நீ போடும் சதித்திட்டம். ஊர் மக்களே "எங்களுக்குத் தீபத்தூணில்தான் விளக்கேற்ற வேண்டும், எங்கள் நம்பிக்கையைக் கெடுக்காதே" என்று சொல்லும்போது, இடையில் புகுந்து குட்டையைக் குழப்ப நீ யார்? அண்ணன் - தம்பியைப் பிரிக்க நினைக்கும் சகுனியே, இதோ கேள்: "விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்" என்று பாடியது தமிழ் இனம். முருகப்பெருமானை 'தமிழ்க்கடவுள்' என்று கொண்டாடும் அதே தமிழ் இனம்தான், அண்ணன் விநாயகரை வணங்காமல் தம்பி முருகனுக்கு விழா எடுக்கக் கூடாது என்ற வழக்கத்தை மரபாகப் பின்பற்றி வருகிறது. ஆன்மீகமே அறியாத உனக்கு, அண்ணன்-தம்பி உறவை வைத்து அரசியல் செய்வது வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் உண்மையான பக்தர்களிடம் உன் பருப்பு வேகாது. சங்க இலக்கியம் முதல் பக்தி இலக்கியம் வரை விநாயகரும், முருகனும் இணைந்தே போற்றப்படுகிறார்கள். "மூத்தக் கணபதிக்கு முக்கனிப் படையலிட்டு" என்று பாடிவிட்டுத்தான் முருகனைத் தொழுதார்கள் நம் முன்னோர்கள். இந்த வரலாறெல்லாம் உன்னைப் போன்ற அரைகுறைகளுக்கு எங்கே தெரியப் போகிறது? வெறும் வாய்க்கு அவல் கிடைக்கும் என்று காத்திருக்கும் உன்னைப் போன்ற கழுகுகளுக்கு, திருப்பரங்குன்றம் பக்தர்களின் பக்தி புரியாது. உன் பிரிவினைவாத விஷத்தை, உன் கூட்டாளிகளோடு வைத்துக்கொள். ஆன்மீக பூமியில் வந்து விஷத்தைக் கக்காதே. திருப்பரங்குன்றம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்! உன் சதித்திட்டம் இங்கே எடுபடாது.

Dr.SG Suryah

20,701 views • 10 months ago