Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப's banner
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப's profile picture

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

@manickamtagore • 82,908 subscribers

President, Tamilnadu Congress Committee.@incTamilnadu MP for Virudhunagar (3rd term)

Shorts

United we stand 🤝 ⁦#Congress #TVK#CPM#IUML#VCK against #NEET

United we stand 🤝 ⁦#Congress #TVK#CPM#IUML#VCK against #NEET

30,890 görüntüleme

Videos

manickamtagore's profile picture

திமுக தோல்விக்கு ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு, பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய பேச்சுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம்தான் காரணம்! 21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் (S.I.R.) மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. தமிழ்நாடு முழுவதும், திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களான BLA2-க்களைச் சந்தித்து வருகிறேன். திமுக சார்பில் 75,032 BLA2-க்கள், 5,50,000 வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் (BLC), 75,032 வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த 7 லட்சம் பேர்தான்” என்றார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் மக்கள் திமுகவை முற்றிலுமாகப் புறக்கணித்துத் தோல்வியைத் தந்தவுடன், இப்போது எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதே தங்களது தோல்விக்குக் காரணம் என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதற்கு, அன்றைய முதலமைச்சராக இருந்த அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே மதுரைக் கூட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். தேர்தலுக்கு முன்னால் "வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் சிறப்பாக முடித்துவிட்டோம், எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று கூறிவிட்டு, தேர்தல் முடிந்து மக்கள் தீர்ப்பு எதிராக வந்த பிறகு மட்டும் வாக்காளர் திருத்தப் பணி மீது பழியைப் போடுவது என்ன வகையான அரசியல்? குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்ட மனுவின் 4-வது கோரிக்கையில் கூட, எங்கு வாக்குத் திருட்டிற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் (Conclusive evidence of vote chori) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோ, அந்த மாநிலங்களின் தேர்தல்களை மட்டுமே ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது! மேற்கு வங்கத்தில் அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆரைச் செயல்படுத்த மறுத்தபோதிலும், ‘ஊடுருவல்காரர்கள்’ என்ற பெயரைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாகப் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல அசாமிலும் பீகாரிலும் முறைகேடுகள் நடைபெற்றன; மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வேறு வகையான வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது! ஆனால், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய இடங்களில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை. வரலாறு காணாத ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை அவமதித்து தான் திமுகவின் உண்மையான தோல்விக்குக் காரணம்! இப்போதுகூட எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகிறார்களே தவிர, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள். ஆனால், திமுக சார்பில் ஒரு எம்பி கூட பங்கேற்கவில்லை. இதற்கு என்ன காரணம்? எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம். தமிழ்நாட்டின் நலன், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றில் திமுகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

112,883 görüntüleme • 17 gün önce

manickamtagore's profile picture

🔥 SUPER GOAL — 50,000 SOCIAL MEDIA WARRIORS! தம்பி Vijay Vasanth தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகப் படை புதிய வேகத்துடன் களமிறங்குகிறது! பொய்யை பரப்பும் சங்கி Fake News-ஐ உண்மையாலும் ஆதாரங்களாலும் எதிர்ப்போம். பணத்தாலும் ஆணவதாலும் இயக்கப்படும் #அல்றசில்றITWing யின் #ஆபாசநதி அரசியலை மக்கள் குரலால் முறியடிப்போம். 📱 நீங்களும் ஒரு Digital Warrior! 🔥 ஒவ்வொரு வாரியரும் ஒரு Truth Warrior! 🇮🇳 ஒவ்வொரு குரலும் 2029 INDIA வெற்றிக்கான குரல்! 🎯 50,000 Social Media Warriors 🇮🇳 2029 — INDIA வெற்றி ❤️ ராகுல் காந்தி — இந்தியாவின் பிரதமர்! வாருங்கள்… அணியில் இணையுங்கள்! பொய்யை எதிர்ப்போம். உண்மையைப் பரப்புவோம். INDIA-வை மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம். 2029-ல் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்! #50KSocialMediaWarriors #VijayVasanth #Congress #INDIA2029 #RahulGandhi #FightFakeNews #TNCongress Tamil Nadu Congress Committee

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

42,147 görüntüleme • 1 ay önce

manickamtagore's profile picture

தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது நேற்று இரவு திமுக ஆதரவாளர்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ ரிக்‌ஷா சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குறித்து திமுக மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளை கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான அரசியல் பழிவாங்கலாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. அமைதியான போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. கருத்து வேறுபாட்டுக்கு வன்முறையால் பதிலளிப்பது, மக்கள் தேர்தலில் நிராகரித்த பிறகு பொறுமையை இழந்து வரும் ஒரு கட்சியின் அகந்தையையும் சகிப்புத்தன்மையின்மையையும் வெளிப்படுத்துகிறது. அரசியல் ரீதியாக பதிலளிக்காமல், அமலாக்கத்துறை விசாரணைகளை எதிர்கொண்டு வரும் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டவும் தாக்கவும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்போது மிரட்டல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் தலைவர் சஹாயராஜ் உடனடியாக இந்த விவகாரத்தை நகர காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். காங்கிரஸ் நிர்வாகி காமராஜை கொலை செய்ய முயன்றவர்களுக்கு எதிராக கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தூத்துக்குடியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம். திமுகவின் அகந்தையும் ரவுடித்தனமும் ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். உதயநிதியின் தலைமையில், வன்முறையும் மிரட்டலும் திமுகவின் அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. காங்கிரஸ் அமைதியாக இருக்காது. இந்த கோழைத்தனமான அரசியலை எதிர்த்து ஒன்றுபட்டு போராடுவோம்; இந்த வன்முறை சக்திக்கு எதிராக உறுதியாக நிற்போம். .#தூத்துக்குடிகாமராஜ்

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

30,391 görüntüleme • 5 ay önce

manickamtagore's profile picture

இந்தியா பின்பற்றும் தேர்தல் முறை First-Past-The-Post (FPTP). இந்த முறையில், மொத்த வாக்கு சதவீதம் மட்டும் அரசியல் வெற்றியை தீர்மானிக்காது; கூட்டணியின் வலிமை, மக்கள் ஆணை, வாக்குகளை இடங்களாக மாற்றும் திறன் ஆகியவையும் equally முக்கியம். 2021: DMK — 37.7% கூட்டணி — 45.4% 2026: DMK — 24.19% கூட்டணி — 27.21% இந்த எண்ணிக்கைகள் தெளிவாக சொல்லுவது என்னவென்றால், DMK-வின் முந்தைய பலம் பெரும்பாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவும், ஒன்றுபட்ட மதச்சார்பற்ற முன்னணியுமே. 2014-இல் இருந்த வாக்கு சதவீத நிலைக்கே மீண்டும் வந்திருப்பதை DMK வெளிப்படையாக ஏற்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. மற்றவர்களை குறை கூறுவதால் அரசியல் யதார்த்தம் மாறாது. மக்கள் ஆதரவில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த தேர்தல் இன்னொரு முக்கியமான செய்தியையும் கூறியுள்ளது: தமிழ்நாடு மக்கள் கூட்டணி ஆட்சிக்கே வாக்களித்துள்ளனர். திமுக ஏற்றுக்கொள்ளாத அரசியல் யதார்த்தத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். “ஆட்சியில் பங்கு” இனி ஒரு கோஷம் அல்ல — தமிழ்நாட்டின் புதிய அரசியல் நடைமுறை. #ஆட்சியில்பங்கு

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

30,243 görüntüleme • 5 ay önce

manickamtagore's profile picture

‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி! கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்? - மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி! - 50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்! - எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும். - கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களும், 2001-ல் வாஜ்பாய் அவர்களும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது. - சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது. இன்று (ஆகஸ்ட் 9 - வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்! நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைபயணம். மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி Salam Mass அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!✊ #REJECTMODILIMITATION

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

14,944 görüntüleme • 2 ay önce